அந்தம்மா 2 மாநிலத்திற்கு கவர்னர்: நானும் இருக்கேனே… மனுஸ் பொறாமை!

அந்தம்மா 2 மாநிலத்திற்கு கவர்னர்: நானும் இருக்கேனே… மனுஸ் பொறாமை!

Share it if you like it

தமிழிசை செளந்தரராஜனுக்கு, கிடைத்து இருக்கும் கெளரவம் குறித்து தி.மு.க. ஆதரவாளர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவராக இருந்தவர் தமிழிசை செளந்தரராஜன். இவர், தெலுங்கானா மற்றும் புதுவை யூனியன் பிரதேசம் என இரண்டு மாநிலங்களுக்கும் சேர்த்து கவர்னராக இருந்து வருகிறார். இதனிடையே, தி.மு.க.வின் தீவிர ஆதரவாளரும், எழுத்தாளருமான மனுஷ்யபுத்திரன் எனும் புனை பெயரில் உள்ள அப்துல் ஹமீது ஷேக் முகமது, முன்னாள் பா.ஜ.க. தலைவருக்கு கிடைக்கும் கெளரவத்தை பார்த்து விட்டு தனது முகநூல் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டிருக்கிறார்.

மனுஷ்யபுத்திரன் முகநூல் பதிவு இதோ ;

பத்தாண்டுகளுக்கு முன்பு எனது தொலைக் காட்சி தோற்றம். அப்பல்லாம் டி-ஷர்ட்தான் அணிவேன். எல்லோரும் கேப்பாங்க ” இவ்வளவு டிஃபரண்டா எங்க வாங்குறீங்க? ” என்று. நிறைய ஃபேன்ஸ் இருந்தாங்க. ரொம்ப உக்கிரமா இருப்பேன். 2013-ல் தி.மு.க.வுக்கு வந்த பிறகு சட்டைக்கு மாறியாச்சு. அது தமிழிசை செளந்தர்ராஜனோடு கடுமையாக வாதிட்டுக்கொண்டிருந்த காலம்.

நானும் அவங்களும் வந்தா ஷோ ரொம்ப பரபரப்பா இருக்கும். நான்கு நாளைக்கு முன் சாலையில் ஐந்தாறு பாண்டிச்சேரி இனோவா போலீஸ் வண்டி வேகமாக போய்க்கொண்டிருந்ததைப் பார்த்தேன். முன்னால் தமிழிசை போய்க்கொண்டிருந்தார். இரண்டு மாநிலங்களுக்கு கவர்னராக. நான் வழக்கம் போல ஏதோ ஒரு தொலைக்காட்சி விவாதத்திற்கு போய்கொண்டிருந்தேன். காலம் 96 ராமை மட்டுமல்ல, என்னையும் ஒரே இடத்தில் நிறுத்திவிட்டுப் போய்விட்டது. என உருக்கமாக தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

/https://www.facebook.com/manushya.puthiran

May be an image of 1 person and text that says "Your memories on Facebook Abdul, we care about you and the memories that you share here. We thought that you'c like to look back on this post from 10 years ago. LIVE 10years ago மனுஷ்யபுத்திரன் எழுத்தாளர் இந்தியா பப என்பது தவறானது: புதிய Yய தலைமுறை சிதம்பரம்"

Share it if you like it