தமிழக காவல்துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபுவின் கண்ட்ரோலில் இல்லை என அண்ணாமலை குறிப்பிட்டு இருந்தார். அதனை மெய்ப்பிக்கும் வகையில், இக்காணொளி அமைந்துள்ளது.
தி.மு.க எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது பிரியாணி கடை, சுண்டல் கடை, பியூட்டி பார்லர்கள் என கழக கண்மணிகள் செய்த அட்டூழியங்கள், அடாவடிகள் ஏராளம். அரியணையில் தி.மு.க அரசு ஏறிய பின்பு அம்மா உணவகம், அம்மா கிளினீக் மீது தாக்குதல் என தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு நாளுக்கு நாள் மோசமாகி கொண்டே செல்லும் அவலநிலை தொடர்கதையாக இருந்து வருகிறது.
இதுஒருபுறம் இருக்க, ஆண்களை போல பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் மதுவிற்கு அடிமையாகும் சம்பவங்களும் தொடர்ந்து நிகழ்ந்த வண்ணம் இருக்கிறது. மேலும், இது குறித்தான காணொளிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி பொதுமக்கள் மத்தியில் பீதியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி விடுகிறது. இதுதவிர, இளைஞர்கள், சிறுவர்கள் கஞ்சாவிற்கு அடிமையாகும் நிகழ்வுகளும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்வது வாடிக்கையாக இருந்து வருகிறது.
’ஆப்ரேஷன் கங்கா’ நடவடிக்கை எடுத்தால் அது மத்திய அரசு. ‘ஆப்ரேஷன் கஞ்சா’ நடவடிக்கை எடுத்தால் அது தி.மு.க அரசு என்று சென்னையில் நடைபெற்ற பொது கூட்டத்தில் தி.மு.க.வை மிக கடுமையாக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்து இருந்தார். ஆனாலும், தமிழகத்தில் கஞ்சா புழக்கத்தின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பதற்கு இக்காணொளியே சிறந்து உதாரணம். இதுதிராவிட மாடல் அரசா? கஞ்சா மாடல் அரசா? என நெட்டிசன்கள் தி.மு.க.வை சாடி வருகின்றனர்.
காணொளி லிங்க் இதோ.