நீதி கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு தீ குளிக்க முயலும் சம்பவங்கள் தமிழகத்தில் தொடர்கதையாக இருந்து வருகிறது. முயன்ற சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் தி.மு.க ஆட்சி அமைந்த பின்பு பொதுமக்களின் பாதுகாப்பு என்பது பெரும் கேள்விக்குறியாக மாறியுள்ளது. பெண்கள், பள்ளி மாணவிகள் குறிப்பாக பெண் காவலர்களுக்கே போதிய பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. அந்தவகையில், இரவில் ரோந்து பணியை கூட காவலர்கள் தனிமையில் மேற்கொள்ள முடியவில்லை என்பதே நிதர்சனம். இப்படியாக, ஒவ்வொரு நாளும் தமிழக மக்கள் பயத்துடன் தங்கள் பொழுதை கழித்து வருகின்றனர்.
அந்தவகையில், தி.மு.க முன்னோடிகள், கழக கண்மணிகள் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் செய்யும் அட்டூழியங்கள் தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்நிலையில், நீதி கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒரு குடும்பமே தீ குளிக்க முயன்ற காணொளி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடும் மன உளைச்சலுக்கு உள்ளான குடும்ப தலைவர் கூறியதாவது;
ஒரு ஜாதி சான்றிதல் கொடுக்க கூட கலெக்டர் அலுவகம் இல்லை என்றால் நான் என்னதான் செய்வது. எத்தனை முறை என்னை அலைய வைப்பீர்கள். எதற்கு எடுத்தாலும் மேல்முறையீடு போ மேல்முறையீடு என்று கூறுவீர்கள். என் பிள்ளைகளை படிக்க வைக்க கூடவா உங்கள் காலில் நான் விழ வேண்டும். இனியும் நான் என்ன தான் செய்ய வேண்டும். வாழ்வதற்கு கூடவா இந்த நாட்டில் எங்களுக்கு தகுதி இல்லை.. பத்தாவது படிக்கும் குழந்தை பரிட்சை எழுத முடியவில்லை. ஆள் டிக்கெட் தரமாட்டேன் என்கிறார்கள், தலைமை ஆசிரியர் காலில் விழுந்து எனது மகளை முதல் பரிசையை எழுத வைத்தேன். அடுத்த பரிட்சையை எப்படி எழுத வைப்பேன். நாங்கள் செத்தால் சந்தோஷமாக இருக்கும் என்றால் இறந்து விடுகிறோம் என்று தனது குடும்பத்துடன் உருக்கமாக கதறி அழுத சம்பவம் கல்நெஞ்சையும் கரைய வைப்பது போல் உள்ளது.