தமிழக அரசு கொள்முதல் செய்யும் ஆவின் பால் பாக்கெட்டில் புழு இருந்த சம்பவம் தமிழக மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழக மக்களுக்கு தி.மு.க. அரசு தொடர்ந்து பல்வேறு இன்ப அதிர்ச்சிகளை கொடுத்து வருகிறது. அந்த வகையில், சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு என மக்கள் போதும் என்று கதறும் அளவிற்கு பல்வேறு சலுகைகளை தொடர்ந்து வழங்கி வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் தான், இந்த அரசு 2 முறைக்கும் மேல் பால் மற்றும் பால் பொருட்களின் விலையை உயர்த்தி இருக்கிறது.
இதனிடையே, மத்திய அரசின் ஏற்பாட்டில், 47-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், அரிசி, பருப்பு, கோதுமை, உள்ளிட்ட பொருட்களுக்கு 5% சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிப்பது என அனைத்து மாநிலங்களும் ஒப்புதல் அளித்தன. அதேபோல, பால், தயிர், லஸ்ஸி மற்றும் பன்னீர் உள்ளிட்ட பால் பொருட்களுக்கும் 5% சதவீதம் வரி விதிக்கப்பட்டது. ஜி.எஸ்.டி. கவுன்சில் சொன்ன விலையை காட்டிலும், மூன்று மடங்கு விலையை விடியல் அரசு உயர்த்தி இருந்தன.
பால் மற்றும் இதர பொருட்களின் விலை உயர்வுக்கு, மத்திய அரசுதான் காரணம் என தமிழக மக்களிடம் சப்பை கட்டு கட்டியது. இருப்பினும், அறிவார்ந்த தமிழக மக்கள் தி.மு.க.வின் உண்மையான சுயரூபத்தை நன்கு அறிவர். இதுகுறித்து, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மிக தெளிவாக தந்தி டிவி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.
பால் விலையையும் உயர்த்தி, பாலின் அளவையும் குறைத்து மக்களின் வரி பணத்தை ஆளும் தரப்பினர் தொடர்ந்து கொள்ளையடித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில்,
குடும்ப தலைவி ஒருவர் தனது அம்மாவை கடைக்கு அனுப்பி ஆவின் பால் பாக்கெட் ஒன்றை வாங்கி வர செய்து இருக்கிறார். இதையடுத்து, அந்த பாலை பாத்திரத்தில் ஊற்றி காய்ச்ச முயன்று இருக்கிறார். அப்போது, அப்பாலில் புழு இருப்பதை கண்டு அப்பெண்மணி கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனை தொடர்ந்து, அப்பாலின் தரம் எவ்வாறு? உள்ளது என்பதை காட்டும் விதமாக அதனை தனது குடும்ப உறுப்பினர் ஒருவரின் துணையுடன் அதனை காணொளியாக பதிவு செய்துள்ளார். இக்காணொளி தான், சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.