மேயரை இழிவுப்படுத்திய லியோனி!

மேயரை இழிவுப்படுத்திய லியோனி!

Share it if you like it

செருப்பைத் தலையில் தூக்கிக் கொண்டு இருந்த சமுதாயத்தை மேயராக்கியவர் முதல்வர் ஸ்டாலின் என்று லியோனி பேசி இருப்பது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.

தி.மு.க ஆட்சியில் சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாக மாறியுள்ளது. இதுதவிர, தொடர்ந்து அவர்கள் மனம் புண்படும் விதமாக கழக முன்னோடிகள் தொடர்ந்து பேசி வருகின்றனர். அந்தவகையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அன்பகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றும் பொழுது தி.மு.க மூத்த தலைவர் ஆர்.எஸ். பாரதி கூறியதாவது; பட்டியல் இனத்தை சேர்ந்த மக்கள் இன்று உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகளாக இருக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் தி.மு.க போட்ட பிச்சை என்று கூறியிருந்தார். இவரின் இந்த கருத்து பட்டியல் சமூக மக்களின் உணர்வுகளை காயப்படுத்தும் விதமாக அமைந்து இருந்தது. இதையடுத்து, கடும் மனஉளைச்சலுக்கு ஆளான பட்டியல் சமூகத்தை சேர்ந்த பா.ஜ.க. மூத்த தலைவர்கள் சிலர் டெல்லியில் உள்ள தேசிய எஸ்சி ஆணையத்தில் புகார் தெரிவித்து இருந்தனர்.

ஆர்.எஸ்.பாரதியை கைது செய்ய வேண்டும் – டெல்லி எஸ்.சி. ஆணையத்தில் பாஜக சார்பில் புகார் !

இதையடுத்து, தமிழக போக்குவரத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வட்டார வளர்ச்சி அலுவலர் ஒருவரிடம் தீண்டாமையை கடைப்பிடித்தார் இது குறித்த காணொளியை இன்றும் சமூக வலைத்தளங்களில் காண முடியும். அமைச்சரார் பாதிக்கப்பட்ட நபர் கூறியதாவது; போக்குவரத்துறை அமைச்சர் ராஜகணப்பன் என்னை 5 முறைக்கு மேல் நீ எஸ்.சி பிரிவை சேர்ந்தவர் என்பதை சுட்டிக்காட்டி பேசினார். என்னை பணியிடை மாற்றம் செய்ய வேண்டும் என அரசு அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார். தொடர்ந்து, எஸ்.சி என்பதை சுட்டிக்காட்டினார். என் வாழ்நாளில் இதுவரை இப்படியொரு, மனக்காயத்தை நான் அடைந்தது இல்லை என வேதனையுடன் தெரிவித்து இருந்தார்

அதன் லிங்க் இதோ.

இந்த நிலையில் தான், சென்னையை அடுத்த பொன்னேரியில் தி.முக சார்பில் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கும்மிடி பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே கோவிந்தராஜன் தலைமை தாங்கினார். இதில், தலைமைக்கழக கொள்கை பரப்புச் செயலாளர் மற்றும் தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் கழக தலைவருமான திண்டுக்கல் லியோனி கலந்து கொண்டார். அப்பொழுது, அவர் இவ்வாறு பேசினார் ; செருப்பைத் தலையில் தூக்கிக் கொண்டு இருந்த சமுதாயத்தை மேயராக்கி வணக்கத்திற்குரிய மாண்புமிகு மேயர் அவர்களே என அழைக்க வைத்து திராவிட புரட்சியை செய்தவர் ஸ்டாலின் என்று இவர் தெரிவித்த கருத்து தற்பொழுது பேசுபொருளாக மாறியுள்ளது. பட்டியல் சமூக மக்களின் உண்மையான பாதுகாவலர்கள் நாங்கள் தான் என்று சொல்லி கொண்டு தொடர்ந்து அவர்களை புண்படுத்தி வருவது தான் திராவிட மாடல் ஆட்சியா? என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Share it if you like it