பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா மதுரை எய்ம்ஸ் குறித்து தெரிவித்த கருத்தை தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் திரித்து அவதூறு செய்தி பரப்பி வருவதற்கு பலர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
தமிழக பா.ஜ.க. தலைவராக இருப்பவர் அண்ணாமலை. இவர், கூறும் கருத்துக்களை தி.மு.க. ஊடகங்கள் திரித்து பொய் செய்தியாக வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளன. இதனிடையே, பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். அக்கட்சியின், சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட ஜே.பி. நாட்டா இவ்வாறு பேசினார் ;
மதுரை எய்ம்ஸ் கட்டுமானத்துக்கான பூர்வாங்க பணிகள் 95% சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மொத்தம் ரூ. 1,264 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக தொற்று நோய் பிரிவுக்காக ரூ. 134 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. 750 படுக்கைகள் மற்றும் ஐ.சி.யூ. வசதியுடன் கூடிய 250 படுக்கைகள் அமையவுள்ளது. மாணவர் சேர்க்கைகான பணி இடங்கள் 100-ல் இருந்து 250 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மதுரையில் எய்ம்ஸ் கட்டுமான பணிகள் வெகுவிரைவில் நடைபெறும் என அவர் கூறியிருந்தார்.
உண்மை இவ்வாறு இருக்க, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் விருதுநகர் எம்.பி.யுமான மாணிக்கம் தாகூர் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மதுரை எம்.பி. வெங்கடேசன் ஆகியோர் உண்மை தன்மையை முழுமையாக ஆராயாமல் ஜே.பி. நட்டாவின் கருத்தை திரித்து பொய்யான தகவலை வெளியிட்டு இருக்கும் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.