சென்னனை தேனாம்பேட்டையில் நடைபெற்ற திராவிட மாடல் பயிற்சி பட்டறையில் பரோட்டாவிற்காக நடந் குஸ்தி பொதுமக்கள் மத்தியில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.
தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்த பொழுது ஓசி டீ, ஓசி தேங்காய், ஓசி பீடி என கழக கண்மணிகள் ஆடிய கதளி சம்பவங்களை தமிழக மக்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. இதையடுத்து, தி.மு.க நிர்வாகி ஒருவர் ஓசியில் பிரியாணி கேட்டு ஓட்டல் ஊழியர்களிடம் பாக்ஸிங் போட்ட சம்பவம் என தொடர்கதையாக இருந்து வருகிறது.
இதையடுத்து, காலில் சலங்கை கட்டி விட்டது போல இப்பொழுது ஆட்சி அதிகாரம் தி.மு.க.வின் கைகளில் இருக்கிறது. இப்படிபட்ட சூழலில், திராவிட மாடல் ஆட்சியை தமிழகத்தை தாண்டி இந்தியா முழுவதிற்கும் கொண்டு செல்ல வேண்டும் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் விரும்புகிறார். அந்தவகையில், சென்னை தண்டையார் பேட்டையில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் தி.மு.க சார்பில் இளைஞர்களுக்கான திராவிட மாடல் பயிற்சி பட்டறை நடைபெற்றது.
இக்கூட்டத்தில், ஏராளமான இளம் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தி.மு.க துணை பொதுச் செயலாளர் ஆ. ராசா இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு எப்படி செயல்பட வேண்டும் என இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கி இருந்தார். கூட்டத்திற்கு பின்பு அனைவருக்கும் பஃபே முறையில் உணவு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், தயாரிக்கப்பட்ட உணவு பாதிபேருக்கு மட்டுமே போதுமானதாக இருந்துள்ளது. இதனால், உணவு கிடைக்காதவர்கள் சமையல் அறைக்கு சென்று புரோட்டா மாஸ்டரிடம் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து, உணவுகள் வேகமாக தயாரிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில், உணவுகளை பிரித்து கொள்வதில் தி.மு.க நிர்வாகிகள் மத்தியில் பெரும் ரகளையே ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, தாங்கள் அணிவித்து இருந்த அடையாள அட்டைகளை ஆங்காங்கே தி.மு.க.வினர் வீசி சென்ற சம்பவம் விழா ஏற்பாட்டாளர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்தான, செய்தியினை நியூஸ் 18 வெளியிட்டுள்ளது.
அதன் லிங்க் இதோ.