ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதியை போல பா.ஜ.க.வினருக்கு தி.மு.க. மேயர் மிரட்டல்?!

ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதியை போல பா.ஜ.க.வினருக்கு தி.மு.க. மேயர் மிரட்டல்?!

Share it if you like it

நாகர்கோவில் தி.மு.க. மேயர் மகேஷ் பா.ஜ.க. தொண்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழகத்தில், தி.மு.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, சட்டம் ஒழுங்கு படுமோசமாக இருந்து வருகிறது. தமிழக காவல்துறை முதல்வர் கட்டுப்பாட்டில் இல்லை என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஆரம்பத்தில் இருந்தே குற்றம் சாட்டி வருகிறார். இதை மெய்ப்பிக்கும் வகையில், தினசரி எங்காவது ஒரு மூலையில் கொலை, கொள்ளை, செயின் பறிப்பு, வழிப்பறி போன்ற சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. விடியல் ஆட்சியில், பொதுமக்கள் ஒருவித அச்சத்துடனும், பயத்துடனும் வாழும் அவல நிலை ஏற்பட்டிருக்கிறது. அந்த அளவிற்கு, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்து வருகிறது என்பதே நிதர்சனம்.

முதல்வர் ஸ்டாலினை ஒரு பொருட்டாக மதிக்காமல் கழக கண்மணிகள் பல்வேறு அட்டூழியங்களையும், அடாவடிகளையும் இன்று வரை செய்து வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, அக்கட்சியை சேர்ந்த கவுன்சிலர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் தங்கள் பங்கிற்கு என்ன செய்ய முடியுமோ அதனை செய்து முதல்வரை தூங்க விடாமல் செய்து வருகின்றனர். தி.மு.க.வினர் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருவது பொதுமக்கள் மத்தியில் பெரும் பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.

இப்படிப்பட்ட சூழலில், தி.மு.க.வின் சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர் கோவிலில் பொதுக்கூட்டம் ஒன்று அண்மையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில், தி.மு.க.வை சேர்ந்த எம்.எல்.ஏ., முன்னணி நிர்வாகிகள், மற்றும் தொண்டர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அந்த வகையில், நாகர்கோவில் மேயர் மகேஷ் பேசும் போது இவ்வாறு கூறினார்;

நான் மேயராகவும், மாவட்ட செயலாளராக இருக்க கூடிய இந்த மாவட்டத்தில், யாரேனும் ஊறு விளைவிக்கும் வகையில் தலையை நீட்டினால் வீசி விடுவோம் என்பது போல சைகை மூலம் மிரட்டல் விடுத்து இருக்கிறார். அதாவது, பா.ஜ.க.வின் பெயரை குறிப்பிடாமல் அக்கட்சியை சேர்ந்த தொண்டர்களுக்கும், தலைவர்களுக்கும், தி.மு.க. மேயர் பகீர் மிரட்டலை விடுத்து இருக்கிறார் என்பதே பலரின் கருத்தாக உள்ளது. மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தி.மு.க. மேயரின் பேச்சு, அப்பாவிகளை கொல்லும் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளை நினைவுப்படுத்துவது போல அமைந்து இருப்பதாக நெட்டிசன்களும் சமூக ஆர்வலர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it