அமைச்சரின் வருகைக்காக அம்புலன்ஸ் நிறுத்தி வைத்த சம்பவத்திற்கு பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது. தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பு ஏற்றுக் கொண்டு ஒரு வருடத்தை கடந்து விட்டது. இருப்பினும், தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் அதிருப்தியில் இன்று வரை இருந்து வருகின்றனர். கழக கண்மணிகள், கட்சி நிர்வாகிகள் செய்யும் அட்டூழியங்கள், அடாவடிகள் ஒருபுறம் இருக்க, தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் தங்களது செல்வாக்கை பயன்படுத்தி மறுபுறம் பொதுமக்களுக்கு தொடர்ந்து தொல்லைகளை கொடுத்து வருகின்றனர்.
இப்படிப்பட்ட சூழலில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீண்டும் பொதுமக்களின் கடும் கோவத்திற்கு உள்ளாகி இருக்கிறார். கடந்த ஆண்டு தனது பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலினிடம், ஆசி பெற வேண்டி அவரது இல்லத்திற்கு அமைச்சர் சென்று இருந்தார். அப்போது, முதல்வருடன் எடுத்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து இருந்தார்.
அந்த புகைப்படத்தில், முதல்வர் வீட்டின் சுவற்றில் மாட்டி இருந்த விநாயகரின் உருவமும் பதிவாகியுள்ளது. இதையடுத்து, உடனே அந்த படத்தில் சில மாற்றங்களை செய்து மீண்டும் அதே புகைப்படத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்து இருந்தார். ஆனால், கல்வி அமைச்சருக்கே விநாயக பெருமான் தரமான பாடத்தை நடத்தி இருந்தார்.
அதாவது, கண்ணாடியில் விழுந்த விநாயகரின் Reflection-னை அமைச்சர் கவனிக்கவில்லை என்பதே அது. தி.மு.க.வில் 90% ஹிந்துக்கள் இருப்பதாக கூறிக்கொள்ளும் கட்சி தான் இன்று வரை ஹிந்துக்களையும், ஹிந்து உணர்வுகளையும் தொடர்ந்து புண்படுத்தி வருகிறது என்பதற்கு அமைச்சரின் அருவருக்கதக்க செயலே சிறந்த உதாரணம் என அந்நாட்களில் பொதுமக்கள் தங்களது கடும் கண்டனத்தை பதிவு செய்து இருந்தனர்.
இதனிடையே, தஞ்சை மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்திற்கு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் அன்பில் மகேஷ் சென்று இருக்கிறார். அப்போது, அமைச்சர் வரும் வழியில் அம்புலன்ஸ் ஒன்று வந்திருக்கிறது. அமைச்சர் வந்துக் கொண்டு இருக்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக, நீண்ட நேரம் அந்த ஆம்புலன்ஸ் காத்திருக்கும் சூழல் ஏற்படுள்ளது. இதுதான், பொதுமக்கள் மத்தியில் கடும் கோவத்தை ஏற்படுத்தி இருக்கிறது.