ஆளும் தி.மு.க அரசை கடுமையாக விமர்சனம் செய்த பிரபல திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் தீவிர ஆதரவாளராக பார்க்கப்படுபவர் பா. ரஞ்சித். இவரின் திரைப்படங்கள் பெரும்பாலும் ஹிந்துக்களின் உணர்வுகளை சீண்டுவது போல இருக்கும். இதன்காரணமாக, ஹிந்துக்கள் மத்தியில் இவரது படத்திற்கு வரவேற்பு குறைந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில், சமீபத்தில் தமிழக மக்களிடம் மிகப் பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் கே.ஜி.எப். இப்படத்தை பார்த்து விட்டு வெளியில் வந்த ரசிகர் ஒருவர் கூறியதாவது;
கே.ஜி.எப் திரைப்படம் உலக தரத்திற்கு சென்று விட்டது. அவர்கள் வேற லெவலில் சிந்திக்கிறார்கள். இங்கு உள்ளவர்கள் என்னை நசுக்கிட்டான், பிதுக்கிட்டான், அமிக்கிட்டான் என்று படம் எடுத்து கழுத்தை அறுக்கிறார்கள். ஒன்னு அவர்கள் தரத்திற்கு படம் எடுங்கள் இல்லை என்றால் தமிழ் திரைதுறையை மூடி விடுங்கள். தயவு செய்து எங்கள் உயிரை எடுக்காதீர்கள். குறிப்பாக, பா. ரஞ்சித் போன்ற தமிழ் இயக்குனர்களுக்கு இதை சொல்லி கொள்கிறேன் என வேதனையுடன் குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில், தி.மு.க ஆட்சியில் பட்டியல் சமூக மக்களுக்கு தொடர்ந்து இழைக்கப்படும், அநீதிகள் குறித்து பேச வேண்டிய திருமாவளவன் கூட்டணி தர்மபடி வழக்கம் போல கள்ள மெளனம் காத்து வருகின்றார். அந்தவகையில், வி.சி.க தலைவரின் தீவிர ஆதரவாளர் பா. ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆளும் கட்சிக்கு எதிராக நக்கலுடன் இவ்வாறு பதிவு செய்து உள்ளார்.
விடியல் ஆட்சியிலும் தொடரும் சென்னை பூர்வகுடிகள் மீதான அடக்குமுறை! நீதி மன்ற உத்தரவு இம்மக்களுக்கு மட்டும் தானா?? மாற்று திட்டம் என்பது சென்னையை விட்டு வெளியேற்றுவது மட்டும் தானா? இம்மக்களின் உரிமையை, உணர்வை, கோரிக்கையை எப்போது யோசிக்க, மதிக்க தொடங்குவீர்கள் தமிழக அரசே? என்று பா.ரஞ்சித் காட்டமான முறையில் கேள்வி எழுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.