தீ குளித்து தற்கொலை செய்து கொண்ட கண்ணையாவிற்கு குரல் கொடுக்காமல் மெளனம் காக்கும் நெறியாளர் செந்திலுக்கு குவியும் கண்டனம்.
தி.மு.க ஆட்சி அமைந்த பின்பு கழக கண்மணிகளின் அட்டூழியங்கள், அடாவடிகள் மற்றும் சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாக மாறியுள்ளது. எங்கு பார்த்தாலும், கொலை, கொள்ளை, கற்பழிப்பு மற்றும் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு போதிய பாதுகாப்பு இல்லாத அவலநிலை. இதுதவிர, பெண் காவலர்களுக்கே போதிய பாதுகாப்பும், மரியாதையும் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. விடியல் ஆட்சியில் நிகழும் அவலங்களை சுட்டிக்காட்ட வேண்டிய அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் வழக்கம் போல கப்சிப்.
இதுதவிர, தமிழகத்தில் ஆறு லாக்கப் மரணங்கள் நடந்து உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இப்படியாக, மக்கள் விரோத அரசாக இந்த அரசு மாறியுள்ளது என்பதே நிதர்சனம். அந்தவகையில், எங்கு தவறு நடந்தாலும் குரல் கொடுப்பேன், குரல் அற்றவர்களின் குரலாக ஓங்கி ஓலிப்பேன் என கருத்து தெரிவித்தவர் நெறியாளர் செந்தில்.
இப்படி, தி.மு.க ஆட்சியில் தவறுகள் தொடர்ந்து நிகழ்ந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக, விருதுநகர் மாவட்டத்தில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த சிறுமி தி.மு.க நிர்வாகிகளால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது. இதையடுத்து, காவல்துறை விசாரணையில் அதே பட்டியல் சமூகத்தை சேர்ந்த விக்னேஷ் என்பவர் மர்மமான முறையில் மரணமடைந்தது என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் இந்த அரசு மீது குவிந்து வருகிறது. அந்தவகையில், சென்னை கிரீன் வேஸ் சாலையில் உள்ள ராஜா அண்ணாமலைபுரம், இளங்கோ தெருவில் சுமார் 250-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த வீடுகள், பக்கிங்காம் கால்வாயை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருப்பதாகக் கூறி, பொதுப்பணித்துறை அதிகாரிகள் கடந்த ஒருவார காலமாக அந்த வீடுகளை தொடர்ந்து இடித்து வருகின்றனர்.
இதுதவிர, ஆர்.ஏ.புரம் பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அந்தவகையில், கோவிந்தசாமி நகரில் ஆக்கிரமிப்புகள் அகற்றுவதை எதிர்த்து கண்ணையா (60) என்ற முதியவர் மனமுடைந்து உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளித்தார். இதனை கண்டு, கடும் அதிர்ச்சியடைந்த பொதுமக்களும், காவல்துறையினரும் உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், மருத்துவர்களின் முயற்சிக்கு பலன் கிடைக்காமல் முதியவர் மரணம் அடைந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளம் பகுதியை சேர்ந்த தந்தை மகன் (ஜெயராஜ், பென்னிக்ஸ்) கடந்த அ.தி.மு.க ஆட்சியில் காவல்துறை விசாரணையில் மரணமடைந்தனர். அப்பொழுது, நேரில் சென்று அவர்களது குடும்பத்திற்கு ஆறுதல் கூறியவர் தி.மு.க இளைஞர் அணிசெயலாளர் உதயநிதி ஸ்டாலின். ஆனால், தி.மு.க ஆட்சியில் மரணமடைந்த கண்ணையாவின் குடும்பத்திற்கு ஆறுதல் கூட தெரிக்காமல் நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தின் வெளியிட்டு நிகழ்ச்சியில் பிஸியாக இருந்தவர் இதே உதயநிதி என்பது குறிப்பிடத்தக்கது.
சேப்பாக்கம் சேகுவேரா கள்ள மெளனமாக இருப்பது ஒருபுறம் இருக்க, தீ குளித்து தற்கொலை செய்து கொண்ட கண்ணையாவிற்கு இன்றுவரை ஏன்? நெறியாளர் செந்தில் குரல் கொடுக்கவில்லை என நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.