மதுபானங்களை குடிமகன்கள் வாங்க வைப்பது எப்படி? அதாவது, குடிகாரர்களை உயர்த்துவது எப்படி? என டாஸ்மாக் கடைகளின் மேற்பார்வையாளர்கள் ஆலோசனை நடத்தி இருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மதுவிற்கு அடிமையாகி தினம் தினம் ஏதேனும் ஒரு துயர சம்பவம் தமிழகத்தில் இன்று வரை நிகழ்ந்த வண்ணம் இருக்கிறது. அந்தவகையில், பாப்பான்குளம் அருகே மது குடித்த தந்தையை திருத்த வேண்டி 15 வயது மகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கி இருந்தது. இப்படியாக, மதுக்கடைகள் வாயிலாக தமிழகம் மெல்ல மெல்ல அழிவு பாதையை நோக்கி நகர்ந்து கொண்டே இருக்கிறது. காமராஜர் ஆட்சி காலத்தில் 1% ஆக இருந்த குடிகாரர்கள் இன்று 61.4% ஆக வளர்ந்திருக்கிறார்கள் என்று புள்ளி விவரம் ஒன்று கூறுகிறது.
அந்தவகையில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் பூரண மது விலக்கு உண்டு என்று தி.மு.க எம்பி கனிமொழி, உதயநிதி மற்றும் முன்னாள் தி.மு.க தலைவர் ஸ்டாலின் உட்பட பல மூத்த தலைவர்கள் கடந்த சட்டமன்ற தேர்தல் சமயத்தில் பொதுமக்களுக்கு வாக்குறுதி கொடுத்து இருந்தனர். ஆனால், ஆட்சி மாறியதே தவிர காட்சி மாறவில்லை என்பதே நிதர்சனம். இந்நிலையில், தென் சென்னை மாவட்டத்தில் உள்ள 83 டாஸ்மாக் கடைகளின் மேற்பார்வையாளர்கள் கூட்டம் நேற்றைய தினம் நடைபெற்று இருக்கிறது. இக்கூட்டத்தில், மதுபானங்களை குடிமகன்கள் வாங்க வைப்பது எப்படி? அதாவது, மேலும் தமிழ் சமூகம் குடித்து சீரழிப்பது எப்படி? என்பது குறித்த ஆலோசனை நடத்தப்பட்டு இருக்கிறது.
மேலும், கடந்த 2019-ம் ஆண்டு மே மாதத்திலும் இதே போன்று விற்பனை குறைந்ததாகவும் தற்போது, கோடை காலம் முடிந்தாலும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்து வருகிறது. ஆக, மது விற்பனையை அதிகரிப்பது குறித்து விரிவான ஆலோசனை இக்கூட்டத்தில் நடைபெற்று இருக்கிறது. இதுகுறித்தான, செய்தியினை மாலை மலர் செய்தியாக வெளியிட்டு இருக்கிறது.
அதன் லிங்க் இதோ.