கமிஷன் கிடைக்காத ஆத்திரத்தில் தி.மு.க. பேரூராட்சி தலைவர் ஜெயந்தி ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தை தி.மு.க. கவுன்சிலர்கள் புறக்கணித்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
தி.மு.க. ஆட்சியில் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் ஒருபுறம் இருக்க, ஊழல் மற்றும் லஞ்சம் தலைவிரித்து ஆடி வருகிறது. அதனைமெய்ப்பிக்கும் வகையில், இச்சம்பவத்தை குறிப்பிட்டு சொல்லலாம். அதாவது, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியின் தி.மு.க. பேரூராட்சி தலைவராக இருப்பவர் ஜெயந்தி. இவரது, தலைமையில் கூட்டம் நடைபெறும் என தி.மு.க., காங்கிரஸ், அ.தி.மு.க. உள்ளிட்ட கவுன்சிலர்களுக்கு கடிதம் அனுப்பபட்டு இருந்தன. இக்கூட்டத்தில், அ.தி.மு.க.வை சேர்ந்த கவுன்சிலர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கவுன்சிலர்கள் புறக்கணித்துள்ளனர்.
தங்களுக்கு கிடைக்க வேண்டிய கமிஷனை பேரூராட்சி தலைவர் ஜெயந்தி கிடைக்க விடாமல் தடுக்கிறார். ஆகவே, தாங்கள் அந்த கூட்டத்தை புறக்கணித்தாக தி.மு.க. கவுன்சிலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.