தி.மு.க. ஆட்சியில் பட்டியல் சமூக மக்கள் அனுபவித்து வரும் கொடுமைகள் குறித்து வாய் திறக்காமல் பா.ரஞ்சித், திருமாவளவன் உள்ளிட்டவர்கள் வாய் திறக்காமல் கள்ள மெளனம் காத்து வருவது பொதுமக்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தி.மு.க. ஆட்சி தமிழகத்தில் அமைந்த பின்பு பெண்கள், பெண் குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவிகளுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் தொடர்கதையாக இருந்து வருகிறது. அந்த வகையில், விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த இளம் பெண் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 22 – அகல்யா. இவர், பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர். இவரை, தி.மு.க.வை சேர்ந்த இரண்டு நிர்வாகிகள், நான்கு பள்ளி மாணவர்கள் உட்பட எட்டு பேர் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து உள்ளனர். தி.மு.க.வை சேர்ந்த ஹரிஹரன் என்பவன் அகல்யாவிடம் முதலில் நட்பாக பழகியுள்ளான். அதன் பின்பு, நட்பு காதலாக மாறியதாக சொல்லப்படுகிறது. இதனை தொடர்ந்து, அகல்யாவை தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்று உடலுறவு கொண்டு உள்ளான். இதையடுத்து, அக்காட்சிகளை தனது செல்போனில் பதிவு செய்து மற்ற நண்பர்களுக்கும் அனுப்பி இருந்தான்.
இச்சம்பவம், தமிழகத்தையும் தாண்டி நாடு முழுவதும் பேசுப்பொருளாக மாறி இருந்தது. ஹரிஹரன் மற்றும் ஜூனைத் ஆகிய இருவரும் மாவட்ட தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகள் என்பது குறிப்பிடத்தக்கது. பட்டியல் சமூக மக்களின் தலைவராக தம்மை காட்டிக்கொள்ளும் திருமா இதுகுறித்து பேசவில்லை என்பதே நிதர்சனம். இதையடுத்து, (முன்னாள்) தமிழக போக்குவரத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஒருவரிடம் தீண்டாமையை கடைப்பிடித்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இச்சம்பவம், குறித்தும் வாய் திறக்காமல் கள்ள மெளனம் காத்தவர் திருமா.
இப்படிப்பட்ட சூழலில், கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் அருகே உள்ள தொகரப்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், பள்ளி மாணவ, மாணவியருக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி இரண்டு தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், பர்கூர் தி.மு.க.,- எம்.எல்.ஏ., மதியழகன், மாணவ, மாணவியருக்கு இலவச சைக்கிளை வழங்கினார். அப்பகுதியில், மகளிர் பள்ளியில் படிக்கும், 45 மாணவியருக்கும், ஆண்கள் பள்ளியில் படிக்கும், 40 மாணவர்களுக்கும் சைக்கிள்கள் வழங்கப்பட்டன. மகளிர் பள்ளி மாணவியருக்கு வழங்கப்பட்ட சைக்கிள் இருக்கையில் எம்.பி.சி.,- பி.சி.,- எஸ்.சி., என சாக்பீசில் எழுதப்பட்டிருந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தன.
தமிழகத்தில், பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்கள் தொடர்ந்து இழிவுப்படுத்தப்படும் சம்பவங்கள் தொடர்கதையாக இருந்து வருகிறது. ஆனால், தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் திருமாவளன் இதுகுறித்து எல்லாம் பேசாமல் பா.ஜ.க.வை மட்டுமே சீண்டாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
