நரிக்குறவ இன மக்கள் மீண்டும் அவமதிப்பு: வாய் திறப்பாரா சூர்யா?

நரிக்குறவ இன மக்கள் மீண்டும் அவமதிப்பு: வாய் திறப்பாரா சூர்யா?

Share it if you like it

நரிக்குறவ மக்கள் மீண்டும் அவமதிக்கப்பட்டு இருக்கும் சம்பவத்திற்கு சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தி.மு.க ஆட்சியில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த மக்கள் தொடர்ந்து அவமதிக்கும் சம்பவங்கள் தொடர்கதையாக இருந்து வருகிறது. அந்தவகையில், நரிக்குறவ மக்களும் அவமதிக்கப்படும் நிகழ்வும் தொடர்ந்து அரங்கேறிய வண்ணம் இருந்து வருகிறது. இந்நிலையில், சிவகங்கை ஆட்சியர் அலுவலக குறைதீர் முகாமில் மனு அளிக்க வந்த தேவகோட்டையை சேர்ந்த நரிக்குறவ இன மக்களை இருக்கையில் அமர அனுமதிக்காமல் தரையில் அமர வைத்த சம்பவத்திற்கு சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து இருக்கின்றனர். இதுகுறித்த, செய்தியினை நியூஸ் 18 மதுரை மாவட்ட நிருபர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

அதன் லிங்க் இதோ.

இதனிடையே, கடந்த ஆண்டு செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டம், பூஞ்சேரியில் வசிக்கும் நரிக்குறவர் மற்றும் இருளர் இனத்தைச் சேர்ந்த 282 நபர்களுக்கு, முதல்வர் ஸ்டாலின் தமிழக அரசின் சார்பில் வீட்டு மனை பட்டா வழங்கி அவர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டார். இதற்கு நடிகர் சூர்யா, ‘‘மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் எளிய பழங்குடிமக்களின் இல்லம் தேடிச்சென்று வழங்கியிருப்பது வெறும் பட்டா அல்ல, புதிய நம்பிக்கை. காலங்காலமாக தொடரும் எளிய மக்களின் இன்னல்களுக்கு, நிரந்தர தீர்வு கிடைக்கும் என்கிற நம்பிக்கையை அளித்துள்ளது என்று கருத்து தெரிவித்து இருந்தார். ஆனால், முதல்வர் வழங்கிய வீடும் வேண்டாம், இடமும் வேண்டாம் என்று நரிக்குறவர்கள் போராட்டம் நடத்திய சம்பவத்திற்கு இன்று வரை நடிகர் சூர்யா வாய் திறக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இப்படிபட்ட சூழலில் தான், நரிக்குறவ இன மக்கள் மீண்டும் அவமதிக்கப்பட்டு இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it