தேவையில்லாத வழக்குகளை தாக்கல் செய்தாக கூறி தமிழக அரசுக்கு டெல்லி உச்சநீதிமன்றம் அபராதம் விதித்து இருப்பது தற்போது பேசுப்பொருளாக மாறியுள்ளது.
திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. முதல்வராக, ஸ்டாலின் இருந்து வருகிறார். இதுதான், திராவிட மாடல் ஆட்சி. இந்தியாவிற்கே, வழிகாட்டும் ஆட்சி என தொடர்ந்து பேசி வருகிறார். உண்மை என்னவென்றால், கொலை, கொள்ளை, கற்பழிப்பு மற்றும் பாலியல் வன்கொடுமை என தமிழகம் இருண்ட காலத்தை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது. இதுதவிர, வெட்டி விளம்பரங்களையும், ஆடம்பர செலவுகளையும் தி.மு.க. அரசு தொடர்ந்து செய்து வருவதாக குற்றச்சாட்டு உள்ளது. இப்படியாக, விடியல் ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பென்ஷன் தொடர்பாக ஐகோர்ட் தெரிவித்த உத்தரவுக்கு எதிராக டெல்லி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்து இருக்கிறது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இத்தகைய மனுவை அரசு தாக்கல் செய்திருக்கக் கூடாது. தேவையில்லாமல், வழக்குகளை தாக்கல் செய்து நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்த தமிழக அரசுக்கு ரூ. 5 லட்சம் அபராதம் விதிப்பதாக டெல்லி உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகி இருக்கிறது. தமிழக அரசுக்கு அபராதம் விதித்த செய்தியினை நியூஸ் தமிழ் வெளியிட்டுள்ளது. அதன் லிங்க் இதோ.