Share it if you like it
மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருப்பவர் செந்தில்பாலாஜி. இவர், தற்போது ஓமாந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவமனையில் உள்ள செந்தில் பாலாஜியை தமிழக முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில், தி.மு.க.வின் மூத்த தலைவரும் திருச்சி கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான இனிகோ இருதயராஜ் அமைச்சரை சந்திக்க மருத்துவமனைக்கு சென்று இருக்கிறார். அப்போது, பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையினர் தி.மு.க. எம்.எல்.ஏ.விற்கு அனுமதி அளிக்காமல் திருப்பி அனுப்பியுள்ளனர். இந்த காணொளிதான் தற்போது வைரலாகி வருகிறது.
Share it if you like it