நீட் தேர்வு ரத்து ரகசியத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். இதுதான், அந்த ரகசியமா என நெட்டிசன்கள் அவரை வாழ்த்தி வருகின்றனர்.
மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, மத்திய அரசு நீட் தேர்வினை நடைமுறைக்கு கொண்டு வந்தது. தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் நீட் தேர்விற்கு கடும் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்.
ஆளும் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள், மற்றும் பணம் படைத்த முதலைகள் மருத்துவ கல்லூரியை நடத்தி வருகின்றனர். நீட் தேர்வு அவர்களது வருமானத்திற்கு பெரும் தடையாக உள்ளது. இதன்காரணமாக, நீட் தேர்விற்கு எதிராக மாணவர்களை அரசியல்வாதிகள் தூண்டி விடுகின்றனர் என்பதே அனைவரின் குற்றச்சாட்டாக உள்ளது. இதனிடையே, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என உதயநிதி ஸ்டாலின் கூறியிருந்தார். எனினும், ஆட்சியில் அமர்ந்து இரண்டு ஆண்டுகளை தி.மு.க. அரசு நிறைவு செய்துள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், நீட் தேர்வு ரத்து ரகசியத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். அதுகுறித்தான, லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.