தி.மு.க. நிர்வாகி மீது நடவடிக்கை எடுத்த ஸ்டாலின் அரசு வைரமுத்து மீது எப்போது நடவடிக்கை எடுக்கும் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தி.மு.க.வின் மூத்த ஆபாச பேச்சாளர்களில் ஒருவர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி. இவர், அண்மையில் தி.மு.க. பொதுக்கூட்டம் ஒன்றில் பேசுகையில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் நடிகை குஷ்புவை மிகவும் கீழ்த்தரமாக விமர்சனம் செய்திருந்தார். இந்த, காணொளி சமூகவலைத்தளங்களில் வைரலாகியது. இதையடுத்து, பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், பெண்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் பலர் தி.மு.க. அரசை மிக கடுமையாக விமர்சனம் செய்து இருந்தனர். இதனை தொடர்ந்து, ஆபாச பேச்சாளர் கிருஷ்ணமூர்த்தி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், பிரபல திரைப்பட பாடலாசிரியரும் தமிழக முதல்வர் ஸ்டாலினின் நெருங்கிய நண்பருமாக இருப்பவர் வைரமுத்து. இவர், மீது பிரபல பாடகி சின்மயி முதல் இளம் பெண்கள் வரை பாலியல் புகார் தெரிவித்திருக்கின்றனர். ஆனால், வைரமுத்து மீது இதுவரை திராவிட அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதுதான் கொடுமையிலும் கொடுமை என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.