பா.ஜ.க. பெண் நிர்வாகி உமா கார்கி கைது செய்யப்பட்டு இருப்பதன் உண்மையான நோக்கம் என்னவென்பது குறித்து பா.ஜ.க. மூத்த தலைவர் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
விடியல் ஆட்சியில் நடக்கும் அவலங்களை பா.ஜ.க. நிர்வாகிகள் தொடர்ந்து நாட்டு மக்களுக்கு அம்பலப்படுத்தி வருகின்றனர். இதற்கு, உரிய பதில் அளிக்க முடியாமல் தி.மு.க.வினர் திணறி வருகின்றனர். டுவிட்டரில், சிறப்பாக செயல்பட்டு வரும் பா.ஜ.க. நிர்வாகிகளை ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் கட்டம் கட்டி முடக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், பெண் பா.ஜ.க. நிர்வாகி உமா கார்கி இன்று கைது செய்யப்பட்டு இருக்கிறார். இவரது, கைதுக்கு பின்னால் இருக்கும் உண்மை சம்பவம் குறித்து பா.ஜ.க. மூத்த தலைவரும், தொழிற் பிரிவு துணை தலைவருமான செல்வகுமார் விளக்கமாக பேசி காணொளி ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இதுதான் தற்போது வைரலாகி வருகிறது.
மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.