மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைதுறை அமைச்சர் செந்தில் பாலாஜியையும், தமிழக அரசையையும் அரசு ஊழியர் ஒருவர் வெளுத்து வாங்கிய காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
அரசு ஊழியர் கூறியதாவது ;
இதுதான் டாஸ்மாக், ஒரு ரூபாய் அதிகமாக வைத்து விற்பனை செய்தபோது எங்களை கண்டித்து இருந்தால். இன்று மிகப்பெரிய திருடனாகவோ, இந்த சமூகத்தால் ஒதுக்கப்பட்ட மக்களாகவோ பார்க்கப்படபோவதில்லை. பிச்சை எடுக்கிற எங்களிடம் பிச்சை வாங்கி சாப்பிடும் அதிகாரிகள் தான், அத்தனை பேரும் டாஸ்மாக்கில் இருக்கிறான். அது, ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்தாலும் சரி, குருப் 1 அதிகாரியாக இருந்தாலும் சரி, யாராவது நேர்மையானவனாக இருந்தால் என் மீது வழக்கு பதிவு செய்து பார். என்னை நீதிமன்றத்தில் அழைத்து வாதாடா சொல்லுங்க நான் பதில் சொல்ல தயாராக இருக்கிறேன்.
டாஸ்மாக் உற்பத்தி பொருளின் விலை எவ்வளவு தெரியுமா? வெறும் 20 ரூபாய் தான். அந்த கம்பெனிகளிடமிருந்து கோட்டர் பாட்டிலை தமிழக அரசு ரூ. 20-க்கு கொள்முதல் செய்கிறது. ஆனால், 125 ரூபாய்க்கு அந்த பாட்டில் விற்பனை செய்யப்படுகிறது. தேவையில்லாமல், அரசாங்கத்திற்கு 80 ரூபாய் செல்கிறது. ஒரு குடிகாரன் வயிற்றில் அடித்து அரசு நடத்துபவர்கள் நீங்கள். ரூ.5 & ரூ.10 கூட வாங்கி விற்பனை செய்யும் நாங்கள் திருடன் என்றால், ரூ.80 கூடுதலாக வாங்கும் நீங்கள் யாருடா. இந்த டாஸ்மாகை நடத்தி தான் இந்த நாட்டையே நடத்த முடிகிறது என்றால் நீங்கள் எல்லாம் எதற்குமே லாயக்கு இல்லை. இன்று நம்பர் ஒன் வருமானமாக டாஸ்மாக் தான் இருக்கிறது.
கொரோனா காலத்தில் பள்ளிகள் மற்றும் பஸ்கள் நிறுத்தப்பட்டன. ஆனால், டாஸ்மாக் மட்டும் திறந்து வைக்கப்பட்டு இருந்தது. இதில், வேடிக்கை என்னவென்றால், கொரோனா காலத்தில் அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்தன. ஆனால், டாஸ்மாக் மட்டும் திறந்து வைக்கப்பட்டு இருந்தது. இப்படி இருக்கிற இந்த நாட்டில் ஒரு மந்திரி வருகிறார். அவர் ஒரு உத்தம புத்திரன் போல, ஒரு ரூபாய் கூட வைத்து விற்பனை செய்தாலும் உங்களை திகார் ஜெயிலில் போட்டு விடுவேன் என்று சொல்கிறார். ஆனால், அவர் மீது உள்ள ஊழல் வழக்குக்கு மட்டும் கோர்ட்டுக்கே போகவே மாட்டேன் என்கிறார். அவரை கைது செய்யுங்கள் என்று நீதிபதியே சொல்லிட்டார் என்பது போல அமைச்சர் செந்தில் பாலாஜியையும் தமிழக அரசையும் அந்த அரசு ஊழியர் வெளுத்து வாங்கி இருக்கிறார். இக்காணொளி தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.