எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி நன்றி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் கட்சியை வீட்டுக்கு அனுப்பி விட்டு கடந்த 2014- ஆம் ஆண்டு பாரதப் பிரதமராக பதவியேற்று கொண்டவர் மோடி. இவரது, வருகைக்கு பின்பு நாட்டின் வளர்ச்சி அசுர வேகத்தில் இருந்து வருகிறது. அதேவேளையில், காங்கிரஸ் அதள பாதாளத்தை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில், எதிர்வரும் 2024- ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாரதப் பிரதமராக மோடியே மீண்டும் வருவார் என அரசியல் நோக்கர்கள், கருத்து கணிப்பு நிபுணர்கள் உள்ளிட்டவர்கள் கூறியுள்ளனர். இந்த, கருத்து கணிப்பு முடிவுகள் காங்கிரஸ் மேலிடத்தை ஆட்டம் காண செய்து இருக்கிறது. இதையடுத்து, என்ன செய்வது என்று தெரியாத காங்கிரஸ் அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்து மோடிக்கு எதிராக மெகா கூட்டணி அமைக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறது. எனினும், இதற்கு எந்த கட்சியும் உடன்படவில்லை என்று சொல்லப்படுகிறது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், பா.ஜ.க. கூட்டணியில் அல்லாத முதல்வர்கள் பிரதமர் கனவில் இருந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், மேற்குவங்க முதல்வர் மம்தா பேனர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், உள்ளிட்டவர்கள் தாங்கள் தான் அடுத்த பிரதமர் என அறிக்கை விட்டு வந்தனர். எனினும், இவர்களது பேச்சு மக்களிடம் எடுபடவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில், பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தனது தலைமையில் மாற்று கட்சியைச் சேர்ந்த தலைவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி, அனைத்து தலைவர்களும் இன்று பீகாரில் ஒன்று கூடி விவாதம் நடத்தினர்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான், எதிர்க்கட்சிகளின் இக்கூட்டத்திற்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி நன்றி தெரிவித்திருக்கிறார். அதாவது, பிரதமர் மோடியை தங்களால் தனியாக தோற்கடிக்க முடியாது என்றும், அதற்கு மற்றவர்களின் ஆதரவு தேவை என்றும் பகிரங்கமாக அறிவித்த காங்கிரஸுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார். இரானியின் இந்த கருத்து நிதிஷ் குமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தை கிண்டல் செய்யும் வகையில் அமைந்துள்ளது என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.