தமிழக முதல்வராக ஸ்டாலின் இருந்து வருகிறார். இவர், ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பின்பு சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கும் நிலையில் இருந்து வருகிறது. இது தவிர தமிழகப் பெண்களின் பாதுகாப்பு என்பது பெரும் கேள்விக்குறியாக மாறி இருக்கிறது. இது ஒருபுறம் இருக்க, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமியர்களின் ஆதிக்கம் தமிழகத்தில் தலைத் தூக்கிய வண்ணம் உள்ளது..
சிறுபான்மை மக்களின் வாக்கு வங்கியை கருத்தில் கொண்டு, ஆளும் தி.மு.க. அரசு அச்சமூகத்தினர் செய்யும் தவறுகளை கண்டிக்காமல் கண்டும் காணாமல் இருந்து வருகிறது. அதேவேளையில், இந்து மதத்தைச் சேர்ந்தவர் சிறுபான்மையினர் செய்யும் தவறுகளை சுட்டிக் காட்டினால் விடியல் அரசு அவர்கள் மீது தனது அரசு இயந்திரத்தை பயன்படுத்துவதில் தயக்கம் காட்டுவதில்லை.
ஆளுங்கட்சியை சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏ.கள் ஹிந்துக்களின் கலாச்சாரம், பண்பாடுகளை, விமர்சனம் செய்து வருகின்றனர். மறுபுறம் தி.மு.க.வின் ஆதரவாளரான மைனர் விஜய் போன்றவர்கள் ஹிந்து சடங்கு சம்பிரதாயங்களை கொச்சைப்படுத்தி வருகின்றனர். இவ்வாறாக, தமிழகத்தில் விடியல் ஆட்சி விடியாத ஆட்சியை வழங்கி வருகிறது.
இப்படிப்பட்ட சூழலில், கிறிஸ்தவ பாதிரியார் மற்றும் பெண்மணி ஒருவர், ஹிந்துக்கள் அதிகம் இருக்கும் பகுதியில் மதமாற்ற முயற்சியில் ஈடுபட்டு இருக்கின்றனர். இதனை, அவ்வூரை சேர்ந்த சிலர் தட்டிக் கேட்டு விரட்டி அடித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இக்காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே