சேலத்தில் பா.ஜ.க.வின் தெருமுனை பிரச்சாரக் கூட்டத்தை தடுக்கு முயன்ற உடன் பிறப்பை கிராம மக்கள் விரட்டியடித்த காணொளி ஒன்று தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் தலைமையில் அக்கட்சி சுறுசுறுப்பாக இயங்கி வருகிறது. இதன்காரணமாக, அக்கட்சியின் நிர்வாகிகள் தி.மு.க.வின் போலி முகத்திரையை நாட்டு மக்களிடம் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகின்றனர். அதனை மெய்ப்பிக்கும் வகையில், சேலத்தைச் சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகி ஒருவர் தி.மு.க.வின் அவலங்களை சுட்டிக்காட்டும் வகையில் அந்த பகுதியில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் ஒன்றினை நடத்தி இருக்கிறார். இதனை, பொறுத்துக் கொள்ள முடியாத கழக கண்மணி ஒருவர் பா.ஜ.க. நிர்வாகியிடம் இங்கு எப்படி பிரச்சாரம் செய்யலாம் என எகிறி இருக்கிறார். தி.மு.க. நிர்வாகியின் இந்த அடாவடி செயலை கண்ட கிராம மக்கள் அவரை விரட்டி அடித்த காணொளிதான் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.