கெட்டதை கூட தைரியமாக செஞ்சோம் என முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார். இந்த நிலையில், மாணவி அனிதா மரணத்திற்கு யார் காரணம் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தி.மு.க. எதிர்க்கட்சி வரிசையில் இருந்த போது கழக கண்மணிகள் செய்த அட்டூழியங்கள், அடாவடிகள், கொஞ்ச நஞ்சமல்ல. அதனை மெய்ப்பிக்கும் வகையில், பல்வேறு சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வந்தன. ஓசி பிரியாணி, ஓசி டீ, ஓசி தேங்காய் என ஏழை எளியவர்களை மிரட்டி வந்தனர். இந்நிலையில், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அந்த வகையில், தி.மு.க.வின் விடியல் ஆட்சி தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தான், தி.மு.க.வின் சார்பில் அண்மையில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்று இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் இவ்வாறு பேசியிருக்கிறார் : எதிர்க்கட்சியாக இருக்கும் போது கெட்டதை கூட தைரியமாக செஞ்சோம். இப்போது, ஆளும் கட்சியாக மாறிய பின்பு நல்லதை கூட பயத்துடன் செய்ய வேண்டி இருக்கிறது என கூறியிருக்கிறார்.
தி.மு.க. எதிர்க்கட்சி வரிசையில் இருந்த போதுதான் அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். அவரது, மரணம் தமிழகத்தையே உலுக்கி இருந்தது. அனிதா மரணமடைவதற்கு முன்பு தி.மு.க. தலைவர் ஸ்டாலினை சந்தித்து இருக்கிறார். நீட் தேர்விற்கு எதிராக மாணவியை உச்சநீதிமன்றம் வரை அழைத்து சென்றது தி.மு.க.தான் என்று சொல்லப்படுகிறது. இப்படியாக, மாணவி அனிதாவிடம் தி.மு.க. மேலிடம் பெரும் நெருக்கத்தை காட்டியிருக்கிறது. அப்படியிருக்க கெட்டதை கூட தைரியமாக செஞ்சோம் என முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பது பலத்த சந்தேகத்தை வரவழைப்பது போல் உள்ளது என பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.



