பிரபல ஊடகமான தினமலர் ஹிந்தி மொழி குறித்து மக்களிடம் கருத்து கேட்ட காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழக மக்களின் கோவத்திற்கு தி.மு.க. உள்ளாகும் சமயங்களில், தங்களை தற்காத்துக் கொள்ளும் விதமாக, தி.மு.க. தலைவர்கள் கையில் எடுக்கும் ஆயுதம் தான் ஹிந்தி மொழி எதிர்ப்பு. மக்களிடம் மொழி உணர்வை தூண்டி விட்டு அதன்பின்னால் ஒளிந்து கொள்ளும் நம்பியார் காலத்து டெக்னிக்கை இன்றும் அக்கட்சி கடைப்பிடித்து வருகிறது.
ஹிந்தி பேசும் மாநிலங்களில் ஹிந்தியும், ஹிந்தி பேசாத மாநிலங்களில் அந்தந்த மாநில மொழிகளிலும் மருத்துவ படிப்பை தொடரலாம் என அலுவல் மொழி குழு பரிந்துரைத்துள்ளது என்று சொல்லப்படுகிறது. உண்மை இவ்வாறு இருக்க, தமிழர்கள் மீது ஹிந்தி மொழியை திணிக்க மத்திய அரசு முயல்கிறது என தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஒரு மாய தோற்றத்தை ஏற்படுத்த முயல்கின்றன. பால் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, மின்வெட்டு என விடியாத அரசு மீது தமிழக மக்கள் கடும் கோவத்தில் இருந்து வருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில், ஒரு பொய்யான நாடகத்தை அரங்கேற்றி மக்களின் கவனத்தை மீண்டும் திசை திருப்பும் முயற்சியில் தூக்கம் வராத முதல்வர் முயன்று வருகிறார்.
இந்த நிலையில் தான், ஹிந்தி மொழி வேண்டுமா? அல்லது வேண்டாமா? என பிரபல ஊடகமான தினமலர் மக்களிடம் கருத்து கேட்டு இருக்கிறது. இதில், பெரும்பாலான மக்கள் ஹிந்தி மொழி அவசியம் வேண்டும் என குறிப்பிட்டு இருக்கின்றனர். மேலும், இது குறித்தான கூடுதல் தகவல்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.