எழுதாத பேனாவுக்கு 80 கோடி இருக்கு:  எங்க வரிப்பணம் என்னாச்சு?

எழுதாத பேனாவுக்கு 80 கோடி இருக்கு: எங்க வரிப்பணம் என்னாச்சு?

Share it if you like it

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த முதியவர் ஒருவர் தனது கிராமத்திற்கு பஸ் வசதி கிடைக்காத கோவத்தில் தி.மு.க.வை வெளுத்து வாங்கி இருக்கிறார். இக்காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தி.மு.க. ஆட்சி தமிழகத்தில் அமைந்த பின்பு, வெட்டி விளம்பரங்கள் மற்றும் ஆடம்பர செலவுகளுக்கு மக்களின் வரிப்பணம் அதிக அளவில் வீணடிக்கப்பட்டு வருகிறது. அதனை மெய்ப்பிக்கும் விதமாக, சென்னையில் 2,500 கோடியில் பூங்கா, 100 கோடியில் ஈ.வெ.ரா.விற்கு சிலை, 39 கோடியில் மெரினாவில் கருணாநிதிக்கு நினைவிடம் மற்றும் எழுதாத பேனாவிற்கு நடுகடலில் 80 கோடியில் சிலை என பயனற்ற திட்டங்களுக்கு இந்த விடியாத அரசு நிதி ஒதுக்கி இருக்கிறது என்பதே நிதர்சனம். இப்படிப்பட்ட சூழலில் தான், தனது கிராமத்திற்கு பஸ் வசதி கிடைக்காத முதியவர் பேசியதாவது ;

என் பெயர் சண்மூக கனி, பாடாபுரம் சேரன்மாதேவி தாலுக்கா திருநெல்வேலி மாவட்டம். இந்த காணொளி பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு வெளியிடுகிறேன். ஆகவே, இந்த காணொளியை அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இந்த பாடாபுரம் கிராமத்தில் 15 கிராமம் இருக்கு. இந்த கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் பள்ளி சென்று வருவதற்கு பஸ் வசதி இல்லை. முதல்வர் செல்லுக்கு பஸ் வசதி வேண்டும் என பலமுறை முறையிட்டும் உரிய தீர்வு எங்களுக்கு கிடைக்கவில்லை.

அரசு அதிகாரிகள் எங்களுக்கு உரிய தீர்வினை வழங்கவில்லை. மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கி வரும் அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எம்.எல்.ஏ. எம்.பி. பிள்ளைகள் மட்டும் சொகுசு காரில் பள்ளிக்கு செல்லலாம். ஓட்டு போட்ட மக்களின் பிள்ளைகள் மட்டும் கஷ்டபட வேண்டுமா? மாணவர்கள் 6 கி.மீ செல்ல வேண்டி இருக்கு. ஒரு மினி பஸ் வேண்டும் என கேட்கிறோம். இன்று வரை எங்களுக்கு கிடைக்கவில்லை.

கடலில் உங்க அப்பாவின் பேனா வைக்க மட்டும் 80 கோடி மக்களின் வரிப்பணம் இருக்கு. மக்களின் வரிப்பணத்தில் ஒரு பஸ் வசதியை ஏற்படுத்தி தந்தால் என்ன நஷ்டம் ஏற்பட்டு விடும். உங்கள் பிள்ளைகள் மட்டும் நன்றாக படிக்க வேண்டும். கிராமத்து பிள்ளைகள் மட்டும் படிக்க கூடாது அதுதான் உங்கள் எண்ணமா? என மிகவும் காட்டமான முறையில் பேசியிருக்கிறார். மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it