எனக்கு ஹிந்தி தெரியாது: BUT நல்லா பாடுவேன்… சிந்தகியோ குச்பி நஹி!

எனக்கு ஹிந்தி தெரியாது: BUT நல்லா பாடுவேன்… சிந்தகியோ குச்பி நஹி!

Share it if you like it

ஹிந்தி தெரியாதுஎன தி.மு.க. தலைவர்கள் பேசி வருகின்றனர். ஆனால், தி.மு.க.வின் மூத்த தலைவர் திருச்சி சிவா அற்புதமான முறையில் ஹிந்தி பாடல் பாடிய காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

தி.மு.க.வின் இளைஞரணி செயலாளரும், திருவல்லிகேணி – சேப்பாக்க சட்டமன்ற உறுப்பினருமாக இருப்பவர் உதயநிதி ஸ்டாலின். இவர், ஹிந்தி தெரியாது போடா என்ற டீ சர்ட்டை அணிந்து கொண்டு தனது கடும் எதிர்ப்பினை தெரிவித்து இருந்தார். அதேபோல, தூத்துக்குடி எம்.பி. கனிமொழியும் தனது எதிர்ப்பினை பதிவு செய்து இருந்தார். இதனிடையே, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அந்த வகையில், முதல்வராக ஸ்டாலின் இருந்து வருகிறார். இவரது, ஆட்சியில் மக்கள் கடும் இன்னல்களை அனுபவித்து வருகின்றனர்.

மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு, என தமிழக மக்கள் கடும் மன அழுத்தத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர். இதனை, மடை மாற்றிவிடும் விதமாக, தி.மு.க.வினர் கையில் எடுத்து இருப்பதுதான் இந்தி எதிர்ப்பு. ’ஐயோ’ தமிழுக்கு ஆபத்து வந்து விட்டது. ஹிந்தியை, நம் மீது திணிக்க பார்க்கிறார்கள் என்று தி.மு.க. தலைவர்கள் அலற துவங்குவர். இதுகுறித்து, தி.மு.க.வின் ஊடகங்கள் விவாதம் நடத்தும். மேலிடம், கொடுத்த சிக்னல் அடிப்படையில் அதன் அடிமை ஊடகங்கள் மற்றும் சீப்பு போன்ற நெறியாளர்கள் தங்களது வாத திறமையால் தமிழக மக்களை குழப்பி விடுவர். இதுதான், இங்கு காலம் காலமாக நடந்து வருகிறது என்பது பலரின் கருத்து.

இப்படிப்பட்ட சூழலில், தி.மு.க.வின் மூத்த தலைவரும் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவா கூறியதாவது ; நான் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறேன். எனக்கு, ஹிந்தி தெரியாது என்று முதல் காணொளியில் கூறியிருக்கிறார். ஆனால், மற்றொரு காணொளியில் மிகவும் அற்புதமான முறையில் ஹிந்தி மொழியில் பாடி இருக்கிறார். சிந்தகியோ குச்பி நஹி பாடல் தற்போது வைரலாகி வருகிறது.

Image

Share it if you like it