சபாநாயகர் அப்பாவுவின் சொந்த ஊரில் உள்ள தெருவின் பெயரை மக்கள் மாற்றி இருக்கும் சம்பவம் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைந்த பின்பு மக்கள் நலப்பணிகள் பெரும் தோய்வை சந்தித்து இருக்கின்றன. இதன்காரணமாக, பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர். அந்த வகையில், தமிழகத்தில் உள்ள பெரும்பாலான சாலைகள் மற்றும் தெருக்கள் குண்டும் குழியுமாக காட்சி அளித்து வருகின்றன. தரமற்ற சாலைகளுக்கு மிஷன், கரப்ஷன், கலெக்ஷன் தான் காரணம் என பொதுமக்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
இப்படிப்பட்ட சூழலில், தமிழக சபாநாயகரின் கிராமத்தை சேர்ந்த ஊர்மக்கள் தங்களது தெருவிற்கு திராவிட மாடல் தெரு என பெயர் சூட்டி இருப்பது பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு.
நெல்லை மாவட்டம் காவல் கிணறு பஞ்சாயத்திற்கு உட்பட்ட வெள்ளை கோவில் தெருவில் மழை நீர் மற்றும் கழிவு நீர் தேங்கி இருக்கிறது. இதன் காரணமாக, அச்சாலை குண்டும் குழியுமாக மாறியிருக்கிறது. இதையடுத்து, அப்பகுதி முழுவதும் தூர்நாற்றம் வீச துவங்கியிருக்கிறது. இதனை தொடர்ந்து, தங்கள் தெருவினை சீர்படுத்தி தருமாறு அவ்வூர் மக்கள் பஞ்சாயத்து அலுவலகத்தில் புகார் தெரிவித்து இருக்கின்றனர். இருப்பினும், அவர்களது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்கவில்லை. இதனால், கடுப்பான கிராம மக்கள் அந்த தெருவிற்கு திராவிட மாடல் தெரு என்று பெயர் சூட்டி இருக்கின்றனர். அதிலும் குறிப்பாக, மற்றவர்களின் உயிரை காப்பாற்றும் விதமாக கவனமாக செல்லவும் என்று போஸ்டர் அடித்து ஒட்டிய சம்பவம்தான் இதில் ஹைலைட்.
தமிழகத்தில் விடியல் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனை ஏற்றுக்கொள்ளும் விதமாக தங்களது தெருவிற்கு திராவிட மாடல் தெரு என்று மக்கள் விருப்பத்துடன் இந்த பெயரை சூட்டி இருக்கின்றனர். இதில், எதிர்க்கட்சிகள் அரசியல் செய்ய கூடாது என்று சபாநாயகர் சொன்னாலும் சொல்வார் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.