தி.மு.க. அமைச்சரை வெளுத்து வாங்கிய பா.ஜ.க. நிர்வாகி!

தி.மு.க. அமைச்சரை வெளுத்து வாங்கிய பா.ஜ.க. நிர்வாகி!

Share it if you like it

தேசிய செயற்குழு உறுப்பினரும் பிரபல நடிகையுமான குஷ்பு தி.மு.க. அமைச்சர் மனோ தங்கராஜ் ஜூனியர் விகடனுக்கு அளித்த பேட்டியில் வெளுத்து வாங்கியிருக்கிறார்.

தமிழகத்தில், தி.மு.க. எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம், சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கும் நிலையில் இருக்கும். அதே சமயம், பெண்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களது கண்ணியம் பெரும் கேள்விக்குறியாக அமைந்து விடும். மேலும், பெண் குழந்தைகளை பெற்றவர்கள் ஒருவித அச்ச உணர்வுடனே ஒவ்வொரு நாளும் காலத்தை தள்ள வேண்டிய அவலநிலை இருக்கும் என்பதே நிதர்சனம்.

இதனிடையே, சென்னை வடக்கு மாவட்டம் ஆர்.கே.நகர் மேற்கு பகுதி தி.மு.க. சார்பில், பொதுக்கூட்டம் அண்மையில் நடந்தது. இக்கூட்டத்தில், அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் தி.மு.க. முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், பேசிய தி.மு.க. தலைமைக் கழகப் பேச்சாளர் சைதை சாதிக் என்பவர், நடிகைகளும், பா.ஜ.க. நிர்வாகிகளுமான குஷ்பு, நமீதா, காயத்ரி ரகுராம், கவுதமி ஆகியோரின் பெயர்களை சொல்லி, நாலுமே ஐடங்கள் என்று அவதூறாகப் பேசியதோடு, குஷ்புவை தி.மு.க. நிர்வாகி ஒருவருடன் தொடர்புபடுத்தி கீழ்த்தரமாக பேசினார். இப்பேச்சுதான் பா.ஜ.க. நிர்வாகிகள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.

இதனை தொடர்ந்து, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தி.மு.க. நிர்வாகி சைதை சாதிக்கை உடனே கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி நேற்றைய தினம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்தி இருந்தார்.

இப்படிப்பட்ட சூழலில், ஜூனியர் விகடனுக்கு நடிகை குஷ்பு அளித்த பேட்டியில் கூறியதாவது ;

ஒரு பெண் பற்றி இவ்வளவு இழிவாகப் பேசும்போது தி.மு.க. அமைச்சர் மேடையில் உட்கார்ந்து வெட்கமே இல்லாமல் சிரித்துக்கொண்டு இருக்கிறார். கொச்சையாகப் பேசிய அந்தப் பேச்சாளரைக் கட்சியிலிருந்து நீக்க வேண்டும். அமைச்சர் மனோ தங்கராஜ் என்னிடம் மனிப்புக் கேட்க வேண்டும். இவர்களை மாதிரி ஆட்களால்தான் பெண்கள், அரசியலுக்கு வர வேண்டாம் என்று நினைக்கிறார்கள். ஆனால், இந்த மாதிரி நேரத்தில் நாம் தைரியமாகப் பதிலடி கொடுக்க வேண்டும். அந்த பயந்தாங்கொள்ளி அமைச்சர் இப்போது ஓடி ஒளிந்துகொண்டார் பாருங்கள்.. இவர்களின் தைரியம் இவ்வளவுதான் என குறிப்பிட்டு இருக்கிறார்.


Share it if you like it