அம்பேத்கருக்கு நிதியில்லை… எழுதாத பேனாவிற்கு மட்டும் நிதி இருக்கிறதா?

அம்பேத்கருக்கு நிதியில்லை… எழுதாத பேனாவிற்கு மட்டும் நிதி இருக்கிறதா?

Share it if you like it

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் அம்பேத்கர் ஆய்வகம் எனும் பெயரில் புதிய துறையை உருவாக்க தமிழக அரசிடம் நிதியில்லை என்று தெரிவித்து இருப்பது பொதுமக்கள் மத்தியில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

தி.மு.க ஆட்சி அமைந்த பின்பு மக்களின் வரிப்பணம் பல வகையிலும் வீணடிக்கும் சம்பவங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ 2,00, 000-க்கும் மேல் கடன் உள்ளது என்று தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அண்மையில் வெள்ளையறிக்கை வெளியிட்டு இருந்தார். இருப்பினும், இந்த விடியல் அரசு 2,500 கோடியில் சென்னையில் பூங்கா, 100 கோடி-யில் ஈ.வெ.ரா-விற்கு சிலை, 39 கோடியில் கலைஞருக்கு நினைவிடம் மற்றும் 80 கோடியில் எழுதாத பேனாவிற்கு சிலை என்று பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன.

இப்படியாக, பொதுமக்களின் வரிப்பணம் தொடர்ந்து வீணடிக்கப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், பா.ஜ.க.வின் மூத்த தலைவர் மற்றும் பா.ஜ.க. OBC அணியின் மாநில பொதுச் செயலாளருமான வீர. திருநாவுக்கரசு தனது முகநூல் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டு இருக்கிறார்.

அவரின் பதிவு இதோ ; திருவள்ளுவர் பல்கலைக்கழகம் வேலூரில் இயங்கி வருகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தில், Ambedkar Studies எனும் பெயரில் ஒரு புதிய துறையை உருவாக்க ஏற்கனவே முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அந்தத் துறையை இன்னும் ஆரம்பிக்கவில்லை. இதனைக் கண்டு வேதனையுற்ற பேராசிரியர் ஒருவர், “Ambedkar Studies துறையை உடனே உருவாக்க வேண்டும்” என்று அரசுக்கும் பல்கலைக்கழகத்திற்கும் உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், தமிழக அரசையும் பல்கலைக்கழகத்தையும் அழைத்து விசாரித்திருக்கிறது. அப்போது, “Ambedkar Studies துறையைத் தொடங்க இப்போது நிதி வசதி இல்லை. நிதிநிலை சீரானப் பிறகு பின்னர் தொடங்குகிறோம்” என்று தமிழக அரசு சார்பிலும், பல்கலைக்கழகத்தின் சார்பிலும் தெரிவித்துள்ளனர்.

ஈ.வெ.ரா. பெயரில் என்னென்னவோ செய்யும் திமுக அரசுக்கு,
கருணாநிதிக்கு நினைவு சின்னம் கட்ட கோடிகோடியாய் நிதி ஒதுக்கும் திமுக அரசுக்கு,
Ambedkar Studies துறை தொடங்க மட்டும் நிதி இல்லையா? நாட்டுப் பற்றையும், தேசிய ஒற்றுமையையும் வலியுறுத்தி வந்த அண்ணல் அம்பேத்கர் அவர்களைப் பெரும்பாலும் கண்டுகொள்ளாது தி.மு.க. பேருக்கு ஒன்றிரண்டு செய்யும் பெரிய அளவில் எதையும் செய்யாது. அந்தத் தி.மு.க.வுக்கு எதிராகவும், அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு ஆதரவாகவும்
திருமாவளவன் போன்றோரும் குரல் கொடுக்க மாட்டார்கள். மக்கள் உண்மையை உணர வேண்டும்.

அண்ணல் அம்பேத்கர் அவர்கள் நம் தேசத்தின் மாபெரும் தலைவர். Ambedkar Studies துறையை வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் மட்டுமல்ல, தமிழகத்தின் முக்கியமானப் பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் விரைவில் தொடங்க வேண்டும். என்று தனது முகநூல் பக்கத்தில் அவர் பதிவு செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




Share it if you like it