இன்னைக்கும் தூக்கம் போச்சா: ஜாதி பெயரை சொல்லி அழைத்த அமைச்சர்!

இன்னைக்கும் தூக்கம் போச்சா: ஜாதி பெயரை சொல்லி அழைத்த அமைச்சர்!

Share it if you like it

அமைச்சர் தா.மோ. அன்பரசனை கே.என். நேரு ஜாதி பெயரை சொல்லி அழைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் ஜாதிபாகுபாடு கிடையாது. சமத்துவம், சுயமரியாதை கொண்ட மண். இதற்கு, முழுமுதற் காரணம் ஈ.வெ.ரா. தான் என்று தி.மு.க. மற்றும் தி.க.வினர் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். எனினும், விடியல் ஆட்சியில் நிகழும் சம்பவங்களை வைத்து பார்க்கும் போது, ஈ.வெ.ரா. ஒழித்த ஜாதியின் லட்சணம் இதுதானா என்ற கேள்வி மக்கள் மனதில் எழுகிறது.

இதனிடையே, தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்பு அமைச்சர்களின் செயல்பாடுகள் மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பையும், கோவத்தையும் ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், விழுப்புரம் மாவட்டம் மணம் பூண்டியில் நியாய விலை கடை திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார்.

அப்போது, பேசிய அமைச்சர், ஆண் பெண் சமம். இந்த, ஊரில் ஒன்றிய செயலாளராக இருப்பவர் ஒரு பெண். இவர், ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர். இந்த, ஒன்றியத்தின் தலைவராக இருக்கிறார் என்றால் அதுதான் திராவிட மாடல் ஆட்சியின் சாதனை. நீங்க தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சார்ந்த பெண்மணி தானே என்று அப்பெண்ணிடமே அமைச்சர் கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதற்கிடையில், முன்னாள் போக்குவரத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரனிடம் தீண்டாமையை கடைப்பிடித்தார். அமைச்சரால், பாதிக்கப்பட்ட நபர் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது; போக்குவரத்துறை அமைச்சர் ராஜகணப்பன் என்னை 5 முறைக்கு மேல் நீ எஸ்.சி. பிரிவை சேர்ந்தவர் என்பதை சுட்டிக்காட்டி பேசினார். என்னை பணியிடை மாற்றம் செய்ய வேண்டும் என அரசு அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார். தொடர்ந்து, எஸ்.சி என்பதை சுட்டிக்காட்டினார். என் வாழ்நாளில் இதுவரை இப்படியொரு, மனக்காயத்தை நான் அடைந்தது இல்லை என வேதனையுடன் அந்த அரசு ஊழியர் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், காஞ்சிபுர மாவட்டம் சிக்கராயபுரம் கல்குவாரி புதிய நீர்தேக்கமாக மாற்றப்பட உள்ளது. அதுகுறித்தான, பணிகளை நகராட்சி துறை அமைச்சர் கே.என். நேரு, ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், தி.மு.க. எம்.பி. டி.ஆர். பாலு, காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வபெருந்தகை உள்ளிட்டவர்கள் ஆய்வு செய்தனர். அப்போது, அருகில் இருந்த அமைச்சர் அன்பரசனை பார்த்து கே.என். நேரு ஜாதியின் பெயரை சொல்லி அழைத்த சம்பவம் பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. கூடுதல், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இப்படியாக, தி.மு.க. அமைச்சர்கள் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it