கோவை குண்டு வெடிப்பு குறித்து நாங்கள் பேசவில்லை என்றால், இந்நேரம் தீவிரவாதி குடும்பத்திற்கு அரசு வேலையை தி.மு.க. கொடுத்து இருக்கும் என்று பா.ஜ.க. தலைவர் கூறியிருக்கிறார்.
கோவை மாவட்டம், கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு, கடந்த மாதம் அக்டோபர் 23- ம் தேதி அன்று அதிகாலை கார் ஒன்று மிகுந்த சத்தத்துடன் சுக்கு நூறாக வெடித்து சிதறியது. இச்சம்பவத்தில், காரில் பயணம் செய்த ஜமேஷா முபின் என்பவர் பலியானார். இந்நிகழ்வு, தமிழகத்தையும் தாண்டி இந்தியா முழுவதும் பேசுப் பொருளாக மாறியிருந்தது.
இதனை தொடர்ந்து, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கோவையில் நடந்தது சிலிண்டர் விபத்து அல்ல அது தற்கொலை படையை சேர்ந்தவர்கள் நிகழ்த்திய திட்டமிட்ட சதி என்ற பகீர் தகவலை தெரிவித்து இருந்தார். அவரின், குற்றச்சாட்டு தமிழக மக்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. இதனை தொடர்ந்து, கழக கண்மணிகள், தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் என பலர் கோவை குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து பேசாமல், பா.ஜ.க.வின் மீது தங்களது வன்மத்தை வெளிப்படுத்தி வந்தனர்.
இதனிடையே, தி.மு.க.வின் மூத்த தலைவரும் சுற்றுச்சூழல் பிரிவு செயலாளருமான கார்த்திகேய சிவசேனாதிபதி, ஓன் இந்தியா ஊடகத்திற்கு அண்மையில் பேட்டியளித்தார். அப்பேட்டியில், தீவிரவாதிக்கு முட்டு கொடுக்கும் வகையில் இவரது கருத்து அமைந்து இருந்தது. மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, மதுரை மாவட்டத்தில் பா.ஜ.க.வின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். இதையடுத்து, அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, அவர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். இதனை தொடர்ந்து, அவர் பேசுகையில் கோவை குண்டு வெடிப்பு விவகாரம் குறித்து பா.ஜ.க. மட்டும் பேசவில்லை எனில், தமிழக அரசு இந்நேரம் தீவிரவாதி குடும்பத்தில் உள்ள யாரேனும் ஒருவருக்கு அரசு வேலை வழங்கி இருக்கும் என்று தெரிவித்துள்ளார். கூடுதல் விவரங்களுக்கு, அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.