கலகக் தலைவர் திரைப்படம் எப்படி? உள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் அமைச்சரிடம் உரையாடி கொண்டு செல்லும் காணொளி தற்போது வைரலாகி வருகிறது.
தமிழகத்தில், ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இவர், முதல்வராக பொறுப்பு ஏற்றுக் கொண்ட பின்பு சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கும் நிலையிலேயே இருந்து வருகிறது. கொலை, கொள்ளை, திருட்டு, இருட்டு, என மக்கள் அனுபவித்து வரும் கொடுமைகள் ஏராளம். இதற்கு, தீர்வு காண வேண்டிய இடத்தில் இருப்பவர் தமிழக முதல்வர் ஸ்டாலின். இதுதவிர, மருத்துவத்துறை பெரும் கேள்விக்குறியாக மாறியுள்ளது. விடியல் ஆட்சியில் லஞ்சம், ஊழல் தலைவிரித்து ஆடி வருவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
இப்படியான, ஆட்சிதான் தமிழகத்தில் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்தநிலையில் தான், தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இருவரும் வாக்கிங் செல்வது போன்ற காணொளி வெளியாகியுள்ளது. இந்த காணொளியில், உதயநிதி நடித்த திரைப்படம் எப்படி? உள்ளது என முதல்வர் கேட்க, அதற்கு அமைச்சர் ஆஹா ஓஹோ என்று புகழ்வது போன்று அந்த உரையாடல் அமைந்துள்ளது.
உங்கள் துறையில், எந்தவித குறைபாடும் இருக்க கூடாது. தமிழக, மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய நமது அரசு தயாராக இருக்க வேண்டும். மக்களின் தேவை என்ன? என்று முதல்வர் கேட்டியிருக்க வேண்டும். இதற்கு மாறாக, உதயநிதியின் படம் குறித்து அவர் கேள்வி எழுப்பிய சம்பவம் தான் சமூக வலைத்தளங்களில் தற்போது பேசுப்பொருளாகா மாறியுள்ளது.