சின்ன வயதில் இருந்ததே தனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ள காணொளி ஒன்று வைரலாகி வருகிறது.
தி.மு.க. இளைஞரணி செயலாளர் மற்றும் திருவல்லிகேணி – சேப்பாக்க சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருப்பவர் உதயநிதி ஸ்டாலின். இவர், தயாரிப்பாளர் மற்றும் திரைப்பட நடிகராக இருந்து வருகிறார். அந்த வகையில், திரைப்படம் சார்ந்த நிகழ்ச்சி ஒன்றில் அண்மையில் இவர் கலந்து கொண்டார். அப்போது, இவர் பேசியதாவது ; நான் கோவிலுக்கு போனதே இல்லை. சினிமா படப்பிடிப்புகள் மற்றும் சுற்றி பார்க்க செல்வேனே தவிர நான் கோவிலுக்கு போனது இல்லை. சிறுவயதில் இருந்தே எனக்கு கடவுள் நம்பிக்கை என்று அவர் தெரிவித்து இருக்கிறார்.
கடவுள் நம்பிக்கை இல்லை கூறும் இவர்தான் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதிக்கு அண்மையில் சென்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சிறு வயதில் இருந்தே கடவுள் நம்பிக்கை இல்லை என்று கூறுபவர் எதற்காக? அங்கு சென்றார் என்பதே பலரின் கேள்வியாக உள்ளது.
அய்யா வைகுண்டர் தலைமை பதியை சுற்றி பார்க்க தான் உதயநிதி ஸ்டாலின் அங்கு சென்றாரா? எதற்காக ஹிந்துக்களின் உணர்வுகளை தி.மு.க.வினர் தொடர்ந்து புண்படுத்தி வருகின்றனர் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தேர்தல் சமயங்களில் மசூதி, சர்ச் என்று தேடி ஓடும் உதயநிதி ஸ்டாலின் எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. நீங்கள் எனக்கு ஐபம் செய்ய வேண்டாம். எனக்காக துவா செய்ய வேண்டாம் என்று அவர்களிடம் கூற முடியுமா? அந்த துணிச்சல் அவருக்கு உண்டா? என்பதே சமூக ஆர்வலர்களின் கேள்வி. சிறுபான்மை மக்களை வெறும் வாக்கு வங்கியாக பார்க்கும் இவரை அச்சமூகத்தை சேர்ந்தவர்கள் புறக்கணிக்க வேண்டும் என்பதே அனைவரின் கருத்து.