ஹிந்தி மொழியை படிங்க: கனிமொழியை தொடர்ந்து லியோனி அதிரடி!

ஹிந்தி மொழியை படிங்க: கனிமொழியை தொடர்ந்து லியோனி அதிரடி!

Share it if you like it

ஹிந்தி மொழியை படியுங்கள் என தி.மு.க. மூத்த தலைவர் திண்டுக்கல் லியோனி பேசியிருக்கும் காணொளி ஒன்று வைரலாகி வருகிறது.

ஹிந்தி தெரியாது போடா என்று டீ சர்ட் அணிவது, ஹிந்தி படித்தால் பானிபூரி மட்டும் தான் விற்க முடியும் என பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் அமைச்சர் பொன்முடி உரையாற்றியது என ஹிந்தி மொழிக்கு, எதிராக தி.மு.க.வினர் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். இதனிடையே, தி.மு.க. மூத்த தலைவர் மற்றும் தூத்துக்குடி எம்.பி.யுமான கனிமொழி தாம் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் இவ்வாறு பேசியிருந்தார் ; எங்கு வேலை கிடைத்தாலும் போய் சேருங்கள். இந்த வாய்ப்பை நீங்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். வேலை கிடைப்பதே தற்போது மிக கடினமாக இருக்கிறது. வெளியூரில், வேலை கிடைத்தால் இன்னும் சந்தோஷமாக அந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும். உங்களுக்கு, அது ஒரு புது அனுபவமாக இருக்கும் என்று தெரிவித்து இருந்தார்.

தி.மு.க. எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் போது ஹிந்தி தெரியாது போடா என்று அம்மொழிக்கு எதிராக அவதூறு பிரச்சாரம் செய்வது. ஆளும் கட்சியான பின்பு வெளியூரில் வேலை கிடைத்தால் போய் சேருங்கள் என்று கனிமொழி பேசியிருப்பது சரியா? என அந்நாட்களில் பலர் கேள்வி எழுப்பி இருந்தனர்.

இப்படிப்பட்ட சூழலில், தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர், பட்டிமன்ற பேச்சாளர் மற்றும் தி.மு.க.வின் மூத்த தலைவருமான திண்டுக்கல் லியோனி, தேவை உள்ளவர்கள் ஹிந்தி மொழியை படித்து கொள்ளுங்கள் என பேசியிருக்கிறார். இக்காணொளிதான், தற்போது வைரலாகி வருகிறது. மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it