மின் கம்பத்துடன் கழிவுநீக் கால்வாய் அமைத்து தி.மு.க. அரசு நிகழ்த்தி இருக்கும் சாதனையை நெட்டிசன்கள் வாழ்த்தி வருகின்றனர்.
தமிழகத்தில், தி.மு.க. ஆட்சி அமைந்த பின்பு, மக்களின் அடிப்படைவசதிகள் பெரும் கேள்விக்குறியாக மாறியுள்ளது. இதனிடையே, வேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டியாக அண்மையில் தேர்வு செய்யப்பட்டது. அந்த வகையில், பல்வேறு சீரமைப்பு பணிகள் அங்கு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தான், சாலையின் ஓரமாக நின்று கொண்டு இருந்த இருசக்கர வாகனத்தின் மீது சிமெண்டை கொட்டி சாலை அமைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இப்படிப்பட்ட சூழலில், தருமபுரி டூ திருவண்ணாமலை வரை நான்கு வழி சாலை விரவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், அரூர் – மொரப்பூர் சாலையில் நேதாஜி நகர் பகுதியல் வேகமாக பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், கொடுமை என்னவெனில், மின் கம்பங்களை அகற்றாமல் டிரைனேஜ் அமைக்கும் கால்வாயில் அப்படியே மின் கம்பத்துடன் கழிவுநீக் கால்வாய் அமைக்கப்பட்டு உள்ளன. இதுதான் திராவிட மாடல் கால்வாய் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.