பக்தர்களை கோவிலுக்குள் செல்ல கூடாது என பூஜாரியிடம் காவல்துறை உயர் அதிகாரி வாக்குவாதம் செய்த காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
தி.மு.க ஆட்சி அமைந்த நாளில் இருந்தே, ஹிந்து ஆலயங்களை குறிவைத்து, இடிக்கும் சம்பவங்கள், அதிகரித்த வண்ணம் உள்ளது. அதுகுறித்தான, காணொளிகளை இன்றும் சமூக வலைத்தளங்களில் காண முடியும். இதனிடையே, கோயம்புத்தூர் பாரதி நகரில் அமைந்துள்ள பகவான் கிருஷ்ணர் சிலை அண்மையில் உடைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருந்தது.
அதனை தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் பகுதியில் இருந்த பழமையான ராமர் கோவில் இடிக்கப்பட்டன. இவ்வாறாக, விடியல் ஆட்சியில் கோவில்கள் தொடர்ந்து இடிக்கப்படுவது ஹிந்து மக்களின் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இப்படிப்பட்ட சூழலில், தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ் பெற்ற ஆலயம் அருள்மிகு மீனாட்சி சொக்கநாதர் திருக்கோயில். இக்கோயிலுக்கு, வரும் பக்தர்களை உள்ளே நுழையவிடாமல் அப்பகுதியை சேர்ந்த காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் வாக்குவாதம் செய்வது போன்று காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த காணொளியை Sevak Sathya என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.