திருவையாற்றில் புறவழிச்சாலை அமைக்க எங்கள் நிலம் தான் கிடைத்ததா? என விவசாயிகள் வேதனையுடன் பேசிய காணொளி ஒன்று வைரலாகி வருகிறது.
உயிரோடு மண்னை போட்டு எங்கள் பயிரை மூடுகின்றனர். இது எங்களை மூடுவதற்கு சமம். இதனை பார்த்து கொண்டு எங்களால் எப்படி சும்மா இருக்க முடியும். வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளார்கள். தமிழ் நாட்டில் தான் நாங்கள் இருக்கிறோமா? என்று தெரியவில்லை. திருவையாறு புறவழிச்சாலை எனும் பெயரில் இந்த பணி நடைபெற்று வருகிறது. ஆனால், இது ஆற்று மணலை கடத்துவதற்காக இந்த சாலை அமைக்கப்படுகிறது.
அரசின் ஆக்கிரமிப்பு இடங்களை, அகற்றினாலே போதும் இங்கு சாலை அமைக்க வேண்டிய தேவையில்லை. நிலத்தை கையகப்படுத்த வேண்டிய அவசியமில்லை. எங்களுக்கும் நிவாரண நிதி கொடுக்கவில்லை. 60 நாள் பயிருக்கும் இழப்பீடு வழங்கவில்லை என விவசாயி ஒருவர் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார். இதுதான் விவசாயிகளை விடியல் அரசு காக்கும் லட்சணமா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.