மாற்று திறனாளிகளுக்காக தமிழக அரசு கட்டிய மரப்பாலம் ஒரே வாரத்தில் தேசமடைந்து இருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதான் திராவிட மாடல் ஆட்சி என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் மேடைதோறும், பேசி வருகிறார். எனினும், இந்த ஆட்சியில் நடைபெற்று வரும் மக்கள் நலத்திட்ட பணிகள் பெரும் கேள்விக்குறியாக மாறியுள்ளது. அந்த வகையில், கழிவு நீர் கால்வாயில் தொடங்கி சாலைகள் வரை பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.
அதனை உறுதிப்படுத்தும் விதமாக, வேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டியாக அண்மையில் தேர்வு செய்யப்பட்டது. அந்த வகையில், பல்வேறு சீரமைப்பு பணிகள் அங்கு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தான், சாலையின் ஓரமாக நின்று கொண்டு இருந்த இருசக்கர வாகனத்தின் மீது சிமெண்டை கொட்டி சாலை அமைக்கப்பட்டு இருந்தன. இக்காணொளியை, இன்றும் சமூக வலைத்தளங்களில் காண முடியும். ஆதாரம் இதோ.
இப்படிப்பட்ட சூழலில், கடலோர மாவட்டங்களில் ’மாண்டஸ் புயல்’ ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி, சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனிடையே, சென்னை மாநகராட்சியின் சார்பில் கடந்த நவ., 27 – ஆம் தேதி மரப்பாலம் திறந்து வைக்கப்பட்டது.
மாற்று திறனாளிகள் கடற்கரையை அருகில் சென்று பார்க்கும் வண்ணம் இது உருவாக்கப்பட்டுள்ளன. இதற்காக, சுமார் ரூ. 2 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், மெரினா கடற்கரையில் எழுந்த அலையின் காரணமாக அந்த மரப்பாலம் மிக கடுமையாக தேசம் அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பசுமாடு மோதி தேசமடைந்த வந்தே பாரத் ரயிலையும், பாரதப் பிரதமர் மோடியையும் கிண்டல் செய்த தி.மு.க.வினர் இதற்கு என்ன? சொல்லப்போகிறார்கள் என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதுதான் திராவிட மாடல் ஆட்சியா? என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.