தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தனது கட்சி தொண்டரிடம் தீண்டாமையை கடைபிடித்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுயமரியாதை, சமநீதி, சமஉரிமை என்று பேச கூடியவர் தி.மு.க. தலைவர் ஸ்டாலின். இதனையே, மேடைதோறும் அக்கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்கள் பேசி வருகின்றனர். எனினும், அதனை தாங்கள் மட்டும் கடைப்பிடிப்பது இல்லை என்பதை அனைவரும் நன்கு அறிவர். இதனிடையே, கடந்த 2021 – ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், தி.மு.க. வேட்பாளர்களை ஆதரிக்கும் பொருட்டு ஈரோடு மாவட்டத்திற்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் சென்று இருந்தார்.
ஸ்டாலின் பேசும் மேடையில் அனைவரும் அமர்ந்து இருக்க, தனது கட்சியை சேர்ந்த மூத்த தலைவரும் ராஜ்யசபா எம்.பி.யுமான அந்தியூர் செல்வராஜிற்கு மேடையில் இருக்கை கொடுக்காமல் அவரிடம் தீண்டாமையை தி.மு.க. தலைவர் கடைப்பிடித்த சம்பவம் அந்நாட்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
பெட்ரூம், பாத்ரூம் தவிர எல்லா இடத்திலும் கேமரா இருக்கிறது. கட்சி தொண்டர்களும், தலைவர்களும் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும் என கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொதுக்குழுவில் முதல்வர் ஸ்டாலின் அறிவுரை வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அந்தவகையில், தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பு ஏற்றுக் கொண்டார். இந்நிலையில், மக்கள் நலன் சார்ந்த பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைக்கும் விதமாக, தென்காசி மாவட்டத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்று இருந்தார்.
இதையடுத்து, கட்சி தொண்டர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் முதல்வரை வரவேற்றனர். அப்போது, கூட்டத்தில் இருந்த ஒருவர் முதல்வருக்கு கை கொடுக்க விரும்பியுள்ளார். அதற்கு, ஸ்டாலின் மறுப்பு தெரிவித்ததோடு பின்னோடி போ என்பது போல செய்கை செய்து தீண்டாமையை கடைப்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.