உதயநிதியிடம் மண்டியிட்ட பி.டி.ஆர்.!

உதயநிதியிடம் மண்டியிட்ட பி.டி.ஆர்.!

Share it if you like it

உதயநிதி ஸ்டாலினிடம் தமிழக நிதியமச்சர் பழனிவேல் தியாகராஜன் மண்டியிட்டு விட்டதாக நெட்டிசன்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

தமிழக நிதியமைச்சராக இருப்பவர் பழனிவேல் தியாகராஜன். இவர், பத்திரிகையாளர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு, முறையாக பதில் அளிக்காமல் அவர்களை கிண்டல் செய்வது அல்லது விமர்சனம் செய்வதையே வாடிக்கையாக கொண்டவர். இதுதவிர, நான் யார் தெரியுமா? எனது படிப்பு என்னவென்று தெரியுமா? எனது குடும்ப வரலாறு பற்றி தெரியுமா? என்று தன்னை உயர்த்தி பேசுவதையே தொழிலாக கொண்டவர்.

உ.பி.யில் நடைபெற்ற ஜி.எஸ்.டி. மீட்டிங்கில் ஏன்? கலந்துகொள்ளவில்லை என்று நிருபர் கேட்டதற்கு, வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்று இருந்தேன் என கூறியிருந்தார். பெட்போரல், டீசல் விலை எப்போது? குறையும் என பத்திரிகையாளர் வைத்த கேள்விக்கு ’தேதி போட்டாங்களா’ என்று பொங்கினார்.

இப்படியாக, இவரது செயல்பாடுகள் அமைந்துள்ளன. இப்படிப்பட்ட சூழலில் தான், கடந்த டிச., 14 – ஆம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பு ஏற்றுக் கொண்டார். இதையடுத்து, புதிதாக மாற்றியமைக்கப்பட்ட அமைச்சரவை குழுவுடன் முதல்வர் ஸ்டாலின் மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டவர்கள் புகைப்படம் எடுத்து கொண்டனர்.

இதையடுத்து, தமிழக அரசு தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முதல் முறையாக எம்.எல்.ஏ.வும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினை தமிழக அமைச்சரவையில் 10 -வது இடத்திலும், இரண்டு முறை எம்.எல்.ஏ.வாகவும், தற்போது மாநில நிதியமைச்சராக உள்ள பழனிவேல் தியாகராஜனுக்கு 27 -வது இடம் அளிக்கப்பட்டுள்ளது.

நேற்று, அரசியலுக்கு வந்த உதயநிதிக்கு அமைச்சரவையில் 10-வது இடம். மூத்த அமைச்சர் நிதியமைச்சருக்கு 27-வது இடமா? என அவரது ஆதரவாளார்கள் சமூக வலைத்தளங்களில் ஆவேசமான முறையில் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேவேளையில், பி.டி.ஆர். உதயநிதியிடம் அடிபணிந்து விட்டார் என்று நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.


Share it if you like it