இந்திய ராணுவ வீரரை தி.மு.க கவுன்சிலர் அடித்து கொன்ற சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. இதுகுறித்து தமிழக ஊடகங்கள் மற்றும் தமிழக போராளிகள் யாரும் வாய் திறக்காமல் கள்ள மெளனம் காப்பது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, வேலம்பட்டி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் பிரபு-28. இவர், ராணுவ வீரர் ஆவார். இவரது, அண்ணன் பிரபாகரனும் 33 ராணுவ வீரராக உள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் 8-ம் தேதி போச்சம்பள்ளி அடுத்த வேலம்பட்டியில் உள்ள குடிநீர் தொட்டி அருகே பிரபுவின் மனைவி பிரியா துணி துவைத்துக் கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக சென்ற நாஹோகனஹள்ளி பேரூராட்சியில் ஒன்னாவது வார்டு தி.மு.க. கவுன்சிலர் சின்னச்சாமி இதனை கண்டித்து ஆபாசமாக திட்டியிருக்கிறார்.
இதையடுத்து, அங்கு வந்த பிரபுவிற்கும், தி.மு.க. கவுன்சிலருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, அன்று மாலை 10-க்கும் மேற்பட்டோருடன் பிரபுவின் வீட்டிற்கு சின்னசாமி கும்பல் சென்று இருக்கிறது. இதையடுத்து, பிரபுவையும் அவரது அப்பாவையும் அந்த கும்பல் மிக கடுமையாக தாக்கி இருக்கிறது. இதில், படுகாயமடைந்த பிரபு ஓசூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி ராணுவ வீரர் பிரபு நேற்று முன்தினம் மரணமடைந்தார். இதையடுத்து, நாகரசம்பட்டி போலீசார் இதை கொலை வழக்காக பதிவு செய்துள்ளனர்.
தி.மு.க. ஆட்சியில் கவுன்சிலர்களின் அட்டூழியங்கள், அடாவடிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. இதுகுறித்து, ஒரு சில ஊடகங்களை தவிர வேறு எந்த ஒரு ஊடகங்களும் பேச முன்வரவில்லை என்பதே கொடுமையிலும் கொடுமை. குரலற்றவர்களின் குரலாக ஒலிப்பேன் என்று கூறிய சீப்பு செந்தில் மெளனம். பா.ஜ.க. ஆளும் மாநிலங்களை குறிவைத்த விமர்சனம் செய்யும், தி.மு.க. எம்.பி. கனிமொழி மற்றும் கரூர் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி ஆளையே காணோம். பாரதப் பிரதமர் மோடியை விமர்சனம் செய்யும் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் கள்ள மெளனம். இப்படியாக, விடியல் ஆட்சியில் தொடர்ந்து நடக்கும் அவலங்களை கண்டிக்காமல் தமிழக போராளிகள் ஏன்? மெளனமாக இருக்கிறார்கள் என்பதே பலரின் கேள்வியாக உள்ளது.