நம்ம ஸ்கூல் ஃபவுண்டஷேன்; பா.ஜ.க. மூத்த தலைவர் வேண்டுகோள்!

நம்ம ஸ்கூல் ஃபவுண்டஷேன்; பா.ஜ.க. மூத்த தலைவர் வேண்டுகோள்!

Share it if you like it

தமிழக முதல்வர் ஸ்டாலின், துவக்கி வைத்த நம்ம ஸ்கூல் ஃபவுண்டஷேன் திட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டும் என பா.ஜ.க. மூத்த தலைவர் நாராயணன் திருப்பதி வேண்டுகோள் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து, நாராயணன் திருப்பதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவு இதோ;

‘நம்ம ஸ்கூல் ஃபவுண்டஷேன்’ என்று இரு நாட்களுக்கு முன் நம் தமிழக முதல்வர் துவக்கிய திட்டம் குறித்து நேற்று நான் பதிவிட்டிருந்தேன். இந்த திட்டத்திற்கு நிதியை வாரி வழங்க வேண்டும் என்று பொது மக்களிடம் முதல்வர் கோரிக்கை விடுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. ஆனால் அரசுப்பள்ளிகளை தரம் உயர்த்த தேவை நிதி அல்ல நிதி மேலாண்மை என்றும், கல்வி துறையில் நடைபெறும் முறை கேடுகளை தவிர்த்து, லஞ்சம், ஊழலில்லா நிர்வாகத்தை கொடுத்தாலே அரசுப்பள்ளிகளின் தரம் உயரும் என்றும் நான் விமர்சித்திருந்தேன். அதன் தொடர்ச்சியாக இன்று, நம்ம ஸ்கூல் ஃபவுண்டஷேன்

இணையதளத்தை பார்வையிட்ட போது கடும் அதிர்ச்சி காத்திருந்தது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அரசு பள்ளிகளை மேம்படுத்த என்னென்ன தேவை, எவ்வளவு நிதி தேவை என்று பள்ளி வாரியாக புள்ளி விவரங்களை தாங்கியுள்ளது தமிழக அரசினுடைய இந்த இணையதளம். அதனடிப்படையில் ஒரு

சோதனை முயற்சியாக, கடலூர் மாவட்டம், புவனகிரி ஒன்றியம். சொக்கன் கொல்லையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிக்கு தேவையானது என்ன என்ற விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அந்த விவரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பள்ளியை மேம்படுத்த, கட்டமைக்க மொத்தம் ரூபாய். 7,01,61,250 (ரூபாய் 7 கோடியே, ஒரு லட்சத்து, 61 ஆயிரத்து, இருநூற்று ஐம்பது) (அச்சுப்பிழையாக இருக்கலாம்) தேவைப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் சுற்றுசுவருக்கான செலவு என்பதை 6,90,000 என்று எடுத்து கொள்ளலாம். இன்று அந்த பகுதியில் உள்ள நம் நண்பரை தொடர்பு கொண்டு இந்த பள்ளி குறித்த சில விவரங்களை சேகரித்தேன்.

அதன்படி, இந்த பள்ளியில் மொத்தம் 39 மாணவ, மாணவிகள் மட்டுமே உள்ள நிலையில் இரு ஆசிரியர்கள் உள்ளனர். அனைத்து அறைகளும் மிக சிறப்பாகவே உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும், இந்த பள்ளி பள்ளிக்கு மிக அருமையான, பலமான சுற்றுச்சுவர் ஏற்கனவே உள்ளது. மேலும் புதிய வகுப்பறைகள் ஏதும் தற்போதைக்கு தேவையில்லை என்றும் புரிந்து கொள்ள முடிகிறது. தேவையென குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்து பொருட்களுடைய விலையும் மிக அதிகமாக குறிப்பிடப்பட்டிருப்பதும் அதிர்ச்சியளிக்கிறது. ஏற்கனவே, தமிழக கல்வி துறையில் நடைபெறும் ஊழல், லஞ்சம், முறைகேடுகள் குறித்து விரிவாக நான் குறிப்பிட்டிருந்த நிலையில், ‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்பதை மெய்ப்பிக்கும் வகையில் இந்த விவரங்கள் வெளிப்படைத்தன்மையில்லாமல் ‘வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ’ என்பது போல் அரசு இணையதளத்தில் வெளியிடப்பட்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இது போன்ற தவறான தகவல்களை நம்பி மக்களை ஏமாற்றி நிதி பெறுவது போன்ற ஒரு சூழ்நிலையை அரசே உருவாக்கலாமா? அல்லது இந்த தரவுகளை நம்பி பணம் கொடுப்பவர்கள், பின்னர் தாங்கள் தமிழக அரசால் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்று எண்ண மாட்டார்களா? இந்த தரவுகள் திட்டமிட்டே திணிக்கப்பட்டிருந்தாலும், அலட்சியத்தில் பதிவிட்டிருந்தாலும், முதல்வரின் முழக்கத்தை கேலிக்கூத்தாக்கிய காரணத்திற்கும், அரசு பணியில் அலட்சியமாக இருந்த காரணத்திற்காகவும் உரியவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு பள்ளி குறித்தும் இப்படிப்பட்ட தவறான, போலியான, மிகைப்படுத்தப்பட்ட விவரங்கள் தான் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.

உடனடியாக இந்த இணையதளத்தில் உள்ள போலி விவரங்கள் அனைத்தும் அகற்றப்பட வேண்டும். உண்மையான, வெளிப்படைத்தன்மை கொண்ட விவரங்கள் வெளியிடப்பட வேண்டும். மக்கள் வழங்கும் நிதி முறையாக செலவிடப்படும் என்கிற உத்தரவாதத்தை தமிழக அரசு வழங்குவதோடு, மக்களின் நம்பிக்கையையும் பெற முயற்சிக்க வேண்டும். அதுவரை இந்த திட்டத்தில் நிதி வசூலிப்பதை நிறுத்த வேண்டும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த விவகாரத்தில் தலையிட்டு வெளிப்படையான நிர்வாகத்திற்கு வழி வகுக்க வேண்டும்.


Share it if you like it