தி.மு.க. அரசின் மின கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்த கே. பால கிருஷ்ணுக்கு முரசொலி அட்வைஸ் கொடுத்து இருக்கும் சம்பவம் கூட்டணி கட்சிகள் மத்தியில் பெரும் சலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தி.மு.க. அரசின் சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வு என அடுக்கடுக்கான உயர்வுகளால் ஏழை எளியவர்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். இந்நிலையில், பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தி.மு.க.வை மிக கடுமையாக சாடி இருந்தன. இப்படிப்பட்ட சூழலில், மின் கட்டண உயர்வு தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பாலகிருஷ்ணன் தி.மு.க.வின் நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்து இருந்தார்.
இதற்கு, தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான முரசொலி, மக்கள் தலையில் இந்த மின் கட்டண உயர்வை ஏற்றிட வேண்டும் என்று கழக அரசும் விரும்பவில்லை தவிர்க்க இயலாத நிலையில் மனதில் நிறைய சங்கடங்களை சுமந்து கனத்த இதயத்தோடு தான் இது போன்ற நடவடிக்கைகளில் அரசு ஈடுபட வேண்டி உள்ளது.
மேலும், மார்க்சிஸ்ட் ஆளும் கேரளத்தில் கூட மின் கட்டணம் சமீபத்தில் உயர்த்தப்பட்டது. தோழர் பாலகிருஷ்ணனுக்கு அது தெரியாது இருக்க முடியாது தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் இன்று குரல் எழுப்புவது போல கேரளத்தில் மின் கட்டண உயர்வுக்கு கேரளத்து எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். கடும் விமர்சனங்களை கட்டவிழ்த்து விட்டனர் அதனையும் கே. பாலகிருஷ்ணன் அறிந்திருப்பார். ஆகையால், நாம் விடும் அறிக்கைகள் எதிரிகள் வாய்க்கு அவலாகி விடாது எச்சரிக்கையாகச் செயல்படுவோம் என தெரிவித்துள்ளது.
இதுபோன்ற, அறிக்கைகள் கூட்டணி கட்சிகளிடமிருந்து தொடர்ந்து வருமேயானால், தேர்தல் நேரத்தில் எங்கள் வேலையை நாங்கள் காட்டுவோம் என்பது போல சி.பி.எம். கட்சிக்கு முரசொலி தனது அறிவுரையை வழங்கி இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.