கனிமொழியின் இரட்டை வேடம் அம்பலமாகி இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பெற்றோர்கள், ஆசிரியர்கள், குருமார்கள் மற்றும் பெரியோர்களிடம் ஆசி வாங்குவது என்பது தமிழர்களின் பண்பாடாக பார்க்கப்படுகிறது. இதனை, தமிழர்கள் அனைவரும் இன்று வரை கடைப்பிடித்து வருகின்றனர். ஆனால், தி.மு.க. மற்றும் திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்கள் காலில் விழுந்து ஆசி பெறுவதை மிக கடுமையான விமர்சனம் செய்து வருகின்றனர். இதனிடையே, தி.மு.க.வின் மூத்த தலைவரும் தூத்துக்குடி எம்.பி.யுமான கனிமொழியை அவரது இல்லத்திற்கு சென்று சிலர் சந்தித்து இருக்கின்றனர். அப்போது, தனது உறவினருடன் வந்த சிறுமி ஒருவர் எம்.பி.யின் காலில் விழுந்து வணங்கி இருக்கிறார். இதனால், அதிர்ச்சியடைந்த அவர் இது எல்லாம் தப்பு இப்படி செய்ய கூடாது என்று அச்சிறுமிக்கு அறிவுரை வழங்கி இருக்கிறார்.
இந்நிலையில், தி.மு.க.வின் பொதுக்குழு ஆலோசனை கூட்டம் நேற்றை தினம் சென்னையில் நடைப்பெற்றது. இதையடுத்து, புதிய கழக துணை பொதுச் செயலாளராக கனிமொழி தேர்வு செய்யப்பட்டார். மிகப்பெரிய பதவி கிடைத்த மகிழ்ச்சியில் இருந்த அவர் தனது உறவினர் ஒருவரின் காலில் விழுந்து ஆசி வாங்கி இருக்கிறார். சிறுமிக்கு சமூகநீதி பாடம் நடத்தி விட்டு, தாம் மட்டும் அதனை கடைப்பிடிக்காமல் இருப்பது தான் திராவிட மாடலின் இரட்டை வேடம் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.