தி.மு.க.வின் ஆபாச பேச்சாளரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய பா.ஜ.க. தலைவரை தி.மு.க. அரசு கைது செய்து இருப்பதற்கு பொதுமக்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
சென்னை வடக்கு மாவட்டம், ஆர்.கே.நகர் மேற்கு பகுதி தி.மு.க. சார்பில், பொதுக்கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் தி.மு.க. முக்கிய பிரமுகர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், தி.மு.க.வின் மூத்த ஆபாச பேச்சாளர்களில் ஒருவரான சைதை சாதிக் என்பவன், நடிகைகளும், பா.ஜ.க. நிர்வாகிகளுமான குஷ்பு, நமீதா, காயத்ரி ரகுராம், கவுதமி ஆகியோரின் பெயர்களை சொல்லி, நாலுமே ஐடங்கள் என்று அவதூறாகப் பேசியதோடு, குஷ்புவை தி.மு.க. நிர்வாகி ஒருவருடன் தொடர்புபடுத்தி கீழ்த்தரமாக பேசினார். அவனின் பேச்சு, பா.ஜ.க. நிர்வாகிகள் மட்டுமல்லாது, நடிகர் மற்றும் நடிகைகள் மத்தியில் கடும் கொந்தளிப்பையும், ஆவேசத்தையும் ஏற்படுத்தி இருந்தது. பொது வெளியில், பிரபலமான நடிகைகளை அவதூறாகப் பேசிய தி.மு.க. பேச்சாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ஜ.க. சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில், சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதாக தொடர்ந்து விடியல் அரசு கூறி வருகிறது. இருப்பினும், சைதை சாதிக் கைது செய்யப்படவில்லை. பா.ஜ.க. பெண் நிர்வாகிகளை அவன் இழிவுப்படுத்திய சம்பவம் ஒரு வாரத்தை கடந்து விட்டது. இன்றுவரை, அவன் கைது செய்யப்படவில்லை என்பதே கசப்பான உண்மை.
இப்படிப்பட்ட சூழலில், தி.மு.க. அரசை கண்டித்தும், அக்கட்சியின் ஆபாச பேச்சாளரை உடனே கைது செய்ய வலியுறுத்தியும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து, பா.ஜ.க. பெண் நிர்வாகிகளை இழிவுப்படுத்திய சைதை சாதிக்கை கைது செய்ய வேண்டும் என கோஷம் எழுப்பினர்.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கேட்டு போராட்டம் நடத்திய பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையை தி.மு.க. அரசு கைது செய்து இருக்கிறது. இதுதான் சட்டத்தின் ஆட்சியா? என பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.