இப்போ புலிக் குட்டிக்கு பயிற்சி… அப்புறம் பூனைக்  குட்டிக்கா?

இப்போ புலிக் குட்டிக்கு பயிற்சி… அப்புறம் பூனைக் குட்டிக்கா?

Share it if you like it

புலி குட்டி வேட்டையாடி பழகுவதற்கு ரூ. 75 லட்சம் நிதி ஒதுக்கி இருக்கும் சம்பவம் தமிழக மக்கள் மத்தியில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் தி.மு.க அரசு அமைந்த பின்பு பொதுமக்கள் வரிபணம், பயனற்ற முறையில் வீணடிக்கப்படும் சம்பவங்கள் தொடர்கதையாக இருந்து வருகிறது. அந்தவகையில், சாலைகள் மற்றும் தெருக்களின் பெயர்ப் பலகைகள் டிஜிட்டல் முறையில் மாற்றப்படும். இதற்கு, ரூ. 8.43 கோடி சென்னை மாநகராட்சி பட்ஜட்டில் ஒதுக்கீடு செய்யப்படும் என சென்னை மேயர் பிரியா அண்மையில் கூறியிருந்தார். வாகனங்கள் செல்ல நல்ல ரோடு இல்லை, குடிக்க நல்ல நீர் இல்லை, தேங்கிய மழை நீர் செல்ல வழியில்லை. இதற்கு, தீர்வு காணாமல் பெயர்ப் பலகைகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்குவது அவசியமா? என்று சமூக ஆர்வலர்கள் பலர் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பி இருந்தனர். மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடிக்கவே இது வழிவகுக்கும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து இருந்தனர்.

இதனிடையே, உத்தரபிரதேசத்தில் 23 கோடி மக்களுக்கு 6 லட்சத்து 11 ஆயிரம் கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் வெறும் 8 கோடி மக்களுக்கு 6 லட்சத்து 25 ஆயிரம் கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது என்று பிரபல அரசியல் விமர்சகர் அக்கினிஸ்வரன் தி.மு.க அரசு மீது கடுமையான குற்றச்சாட்டினை முன்வைத்து இருந்தார். இதேநிலை, நீடித்தால் தமிழகம் வெகுவிரைவில் இலங்கை போல மாறிவிடும் என பிரபல எழுத்தாளர் மாரிதாஸ் ஆளும் கட்சியின் தவறை சுட்டிக்காட்டினார்.

இதையடுத்து, 2,500 கோடியில் சென்னையில் பூங்கா. 100 கோடி-யில் ஈ.வெ.ரா-விற்கு சிலை, 39 கோடியில் கலைஞருக்கு நினைவிடம் என தி.மு.க அரசு அடுக்கடுக்கான பயனற்ற அறிவிப்புகளை வெளியிட்டது. இந்நிலையில், புலி குட்டி வேட்டையாடி பழகுவதற்கு 10,000 சதுர அடியில் கம்பி வேலியை வனத்துறை அமைத்துள்ளது. இதற்காக, ரூ. 75 லட்சம் செலவழிக்கப்பட்டுள்ளது. அதுகுறித்த, செய்தி தி ஹிந்து ஆங்கில நாளிதழில் வெளிவந்துள்ளது.

பூனைகள் எலியை வேட்டையாட பயிற்சி திட்டம், குரங்குகள் மரம் தாவுவதற்கு பயிற்சி திட்டம், ஆடு, மாடுகள், புற்களை மேய திட்டம் என அடுக்கடுக்கான திட்டங்களை ஸ்டாலின் அரசு அறிவிக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். இப்படியான, ஆலோசனைகளை வழங்க தான் தமிழக முதல்வருக்கு 5 பொருளாதார நிபுணர்கள் நியமனம் செய்யப்பட்டார்களா? என்று பொதுமக்கள் உட்பட பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Image


Share it if you like it