தி.மு.க அரசை விமர்சனம் செய்த திராவிடர் கழக தலைவர் வீரமணி.
வருகின்ற 22-ம் தேதி தருமபுரம் ஆதீனம் மடத்தின் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சிக்கு, தடை விதிக்க வேண்டும் என திராவிடர் கழகத்தினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதையடுத்து, தருமபுரம் ஆதீனத்தின் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்படுவதாக மயிலாடுதுறை கோட்டாட்சியர் ஜெ.பாலாஜி உத்தரவு பிறப்பித்து இருந்தார். இதற்கு, தமிழக முழுவதும் கடும் எதிர்ப்புகள் குவிந்தன. ஆதீனகர்தர்களும் தங்களது கண்டன குரல்களை பதிவு செய்து இருந்தனர்.
தருமபுர ஆதீனத்தின் பல நூற்றாண்டுகள் பழமையான ‘பட்டின பிரவேசம்’ மீதான தடை தமிழக நாகரிகம் மற்றும் கலாச்சாரத்திற்கு எதிரானது. ஆதினத்தைத் தோளில் சுமக்க நான் நேரில் வருவேன் என்பதைத் தமிழக அரசுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.. இந்த சட்டவிரோத உத்தரவை எதிர்த்து நிகழ்ச்சியை நடத்த அனுமதிக்குமாறு ஆதினத்திடம் கோரிக்கை வைப்போம். கோபாலபுர குடும்பத்தை அவரது கட்சியினர் தூக்கிச் சுமப்பதை போல் அல்ல இது. ஊழியம் மற்றும் குருவுக்குச் செய்யும் சேவையின் உள்ள வேறுபாடுகளைக் கூட அறியாதவர் இந்த கோபாலபுர குடும்பத்தார் இந்த நிகழ்ச்சியை நடத்திக் காட்ட தயாராக இருக்கிறது என்று தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அதிரடியாக கருத்து தெரிவித்து இருந்தார்.
பா.ஜ.க. தலைவரின் இந்த அதிரடி அறிவிப்பு ஹிந்துக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. இதையடுத்து, திடீரென பட்டணப் பிரவேசம் நடத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாய்மொழியாக அனுமதி அளித்து இருந்தார். தமிழக அரசின் இந்த அதிரடி அறிவிப்பு பா.ஜ.க.விற்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக, இந்த சம்பவம் தி.க, மற்றும் நாம் தமிழர் கட்சியினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அந்த வகையில், தருமபுர ஆதீனம் பல்லக்குச் சவாரி பிரச்சினை மனிதனை மனிதன் சுமப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என தமிழக அரசை விமர்சனம் செய்து தனது முகநூல் பக்கத்தில் திராவிடர் கழக தலைவர் வீரமணி கதறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.