தஞ்சை தேர் விபத்துக்கு தி.மு.க அரசு தான் காரணம் என அவ்வூர் மக்கள் குற்றச்சாட்டு சுமத்தி இருப்பது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் அருகே களிமேடு அப்பர் கோவிலின் 94-வது ஆண்டு, அப்பர் குரு பூஜை இரண்டு தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. குருபூஜை வழக்கம் போல நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கி அதிகாலை வரை தேர் ஊர்வலம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதில், ஏராளமான பக்தர்கள் தேர் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். இந்த நிலையில், தான் அந்த துயர சம்பவம் ஏற்பட்டது.
அதிகாலையில் தேர் பூதலூர் சாலை அருகே வந்த போது, ஒரு வீட்டில் பூஜையை முடித்து விட்டு, தேரை திருப்ப முயன்றுள்ளனர். அப்பொழுது, சாலை விரிவாக்க பணிக்காக தோண்டி வைக்கப்பட்ட பள்ளத்தை முறையாக மூடாத காரணத்தினால் தேர் அக்குழியில் இறங்கி சாய்ந்துள்ளது. இதன் காரணமாக, அருகில் இருந்த உயரழுத்த மின் கம்பி மீது தேர் உரசியதால், திடீர் என தீ விபத்து ஏற்பட்டு 3 சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம், தமிழகத்தை தாண்டி இந்தியா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாரதப் பிரமர் மோடி, இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பல்வேறு மாநில முதல்வர்கள் தீ விபத்தில் உயிரிழந்த மக்களுக்கு தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். இதுதவிர, சிலர் தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில், தீ விபத்து ஏற்பட்ட களிமேடு பகுதியை சேர்ந்த ஊர் பொதுமக்கள், ஆளும் கட்சியான தி.மு.க மீது கடுமையான குற்றச்சாட்டினை சுமத்தி இருப்பது தமிழக மக்களிடையே மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.